மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

ஜோதிடத்தில் பித்தம், வாதம் & கபம்


ஜோதிடத்தில்
பித்தம், வாதம் & கபம்







ஜோதிடத்தில் பித்தம், வாதம் & கபம்
 
                   ஜாதகத்தில் நோய் ஸ்தானமான ஆறாம் இடம் வலுத்தால் பத்தாம் இடம் மூலம் உழைத்து சம்பாதித்த செல்வத்தை இரண்டாம் இடமான தனஸ்தானத்தில் வைத்திருந்தாலும் காணாமல் போகும். அதாவது 2-6-10 கர்ம ஸ்தானங்கள். ஆறாம் இடத்தின் வலு குறைந்தால் ஜாதகன் உடல் ஆரோக்யமாக இருப்பான். அவன் சம்பாதித்த பணமும் தனஸ்தானமான குடும்பத்தில் இருக்கும். ஆக, "நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்" .

                   சித்தர்களின் கணக்கு படி இந்த உடல் வாதம், பித்தம், கபம் என்கின்ற உயிர் தாதுக்கள் 1:1/2:1/4 என்ற விகிதத்தில், அதாவது 4:2:1 என்ற கணக்கில் இயங்கி கொண்டிருகிறது. எனவே, நம் உடம்பில் உள்ள கபத்தின் அளவில் இரண்டு மடங்கு பித்தம் இருப்பதாகவும், நான்கு மடங்கு வாதம் இருப்பதாகவும் கணக்கிடுகின்றனர். இதில் எது அதிகமானாலும் அல்லது குறைந்தாலும் மனிதனுக்கு நோய் வரும் எனபது அடிப்படை
 
இதையே தான் திருவள்ளுவரும்,

"மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று"


                 நவகிரகங்கள் ஒன்பது பேரும் இந்த மூன்று நாடிகளை ஆக்கிரமிக்கிறார்கள். புதன், குரு, சனி இந்த மூவரும் அதிக பங்கான வாத நாடிக்கு உரியவர்கள். சூரியன், செவ்வாய், ராகு மற்றும் கேது பித்த நாடிக்கு காரணமானவர்கள். சந்திரன் & சுக்ரன் இருவரும் கபம் நாடியை ஆட்சி செய்கிறார்கள். அவரவர்களுக்கு எந்தவிதமான வியாதி வரும் என்று அறிய அவரவர் ஆறாம் அதிபதி, ஆறாம் இடத்தில் அமர்ந்தவர் மற்றும் இந்த இருவருக்கும் லக்னாதிபதியின் தொடர்பு இவைகளை ஆராய்ந்தால் இதுவரை வந்த வியாதி, இனி வரப்போகும் வியாதி இரண்டையும் கூற முடியும். இந்த கூட்டு கிரகங்களுடன் விரையாதிபதியின் தொடர்பும், மாரக தசை புக்தியும் வரும்போது எச்சரிக்கை தேவை என்பதையும் அறிய முடியும்.

           மனிதனுக்கு மூன்று விதமான வியாதிகள் வரும், முறையே, மனோ வியாதி,கிருமிகள் மூலம் ஏற்படும் உடல் சம்பந்தமான வியாதிகள் மற்றும் விபத்துகள் ஆகும். இந்த மூன்றும் ஏற்படுவதற்கு காரணம் பூர்வ ஜென்மத்தின் விளைவே. இதை நாம் ஐந்தாம் பாவத்தின் மூலம் ஓரளவு மட்டும் அறிய இயலும். இதை இந்த ஜென்மத்தில் குறைக்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படை எண்ணங்களான காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், இடும்பை மற்றும் அகங்காரம் போன்ற இவை எட்டு விஷயங்களில் இருந்து விலகி இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.
 

                     உடலில் பன்னிரண்டு ராசிகளுக்கும் இடம் தந்துள்ளது நமது ஜோதிட சாஸ்திரம். மேஷம் தலை, ரிஷபம் முகம், மிதுனம் கழுத்து & மார்பு, கடகம் இதயம், சிம்மம் வயிறு, கன்னி இடுப்பு, துலாம் முதுகு (அல்லது அடிவயிறு), விருச்சிகம் ஆண் / பெண் குறி, தனுசு தொடை, மகரம் கால்கள், கும்பம் கணுக்கால், மீனம் பாதம் என வகை பிரித்துள்ளனர். சிலர் இதையே லக்னத்தில் இருந்தும் முறையே கூறுவதும் உண்டு. இதே போன்று ஒன்பது கிரகங்களுக்கும் உடலில் இடத்தை பிரித்து உள்ளது ஜோதிட கலை. எந்த கிரகம் எந்த இடத்தில் அமர்ந்தால் எந்த விதமான உடலில் உள்ள இடம் பாதிக்கும் என எளிதில் காணமுடியும்.

==================================================================

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

(composed by:   Jothidamamani M. Balasubramanian, Founder, VARA)


=================================================================

2 கருத்துகள்:

  1. வணக்கம் சார்,
    தங்களுடைய வாதம்,பித்தம்,கபம், கட்டுரை நன்றாக இருந்தது, குறிப்பாக நோய் வரும் முறைகளை எளிதாக தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது
    அன்புடன் ஆறுமுகம்

    பதிலளிநீக்கு