மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 19 ஜனவரி, 2013

Secrets of Woman மங்கையின் ஜாதக ரகசியங்கள்


     மங்கையின் ஜாதக ரகசியங்கள்    

      ஆண்களின் ஜாதகங்களை பார்த்து உடனுக்குடன் பலன் சொல்வது போல் பெண்களின் ஜாதகங்களுக்கு பலன் சொல்ல முற்பட்டால் பலன்கள் முன்னுக்கு பின் முரணாக அமையும்.மங்கையர்களின் ஜாதகங்களை மிகவும் ஆழமாக ஆராய்ந்த பின்னரே பலன்களை முடிவு செய்ய வேண்டும். ஆண்களின் ஜாதகத்தில் எட்டாம் இடம் ஆயுளை குறிக்கும், ஆனால், பெண்களுக்கோ இது மாங்கல்ய ஸ்தானமாக கருதபடுகிறது. பெண்களுக்கு எட்டாம் இடம் மிக முக்கியமான இடம். இதை விட மிக மிக முக்கியமான இடம் இரண்டாம் இடம், காரணம் இந்த இடம் 7-க்கு எட்டாம் இடமாக வருவதால், கணவனின் ஆயுள் ஸ்தானமாக இந்த இரண்டாம் இடம் வருகிறது. இந்த இரண்டாம் இடம் வலு பெற்று இருந்தாலும், இந்த இரண்டாம் இடத்தை சுப கிரகங்களில் முதல் வரிசையில் உள்ள குரு அல்லது சுக்ரன் பார்த்தால், இந்த பெண் என்றும் சுமங்கலி யோகத்தை பெறுகிறாள்.
                                   ஒரு பெண்ணின் நாலாம் பாவத்தை கொண்டு அவளது கற்பு நெறியை எடை போடலாம் என்று சில ஜோதிட நூல்கள் கூறினாலும், அவளது கற்ப்பை பற்றி முழுவதும் நமக்கு உணர்த்துவது அவளது ஜென்ம சந்திரனே ஆகும். சந்திரன் பெற்ற நட்சத்ர காலை பொருத்து பல உண்மைகளை அறிய முடியும்.
"வைத்தியன் கையை பார்ப்பான்; ஜோதிடன் காலை பார்ப்பான்"
                              இதனால் தான் இந்த ஜோதிட பழமொழி மக்கள் இடையில் புழுக்கத்தில் உள்ளது.


                              பெண்களின் கற்பு நெறியை அறிய இதை விட முக்கியம் நமது இந்திய நாட்டின் பண்பாடு, குறிப்பாக தமிழ் கலாச்சார நிலையை இங்கு உற்று நோக்குதல் மிக மிக அவசியமாகிறது.
                           பெண்களின் ஏழாம் பாவம் மூலம் நாம் அறிவது, அவளது திருமண வாழ்வு இனிக்கும, கசக்குமா? என்றும், அவளது கணவனின் குணங்கள், அவனது, ஆறிவு, ஆற்றல், மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். ஆண்களின் ஜாதகத்தில், ஏழாம் இடத்தில் பாவகிரகங்கள் இருந்தால் அவருக்கு ஒன்றுக்கு மேல்பட்ட மனைவிகள் வாய்க்க இடம் உள்ளது என சில ஜோதிடர்கள் பளிச் என்று கூறி விடுகிறார்கள். மக்கள் இதற்கு அதிக முக்கியதுவம் தாராமல் மற்ற ஜோதிட விஷயங்களை விசாரிக்கிறார்கள். ஆனால், இதுவே பெண்களின் ஜாதகத்தில், ஏழாம் இடத்தில் பாவகிரகங்களான, செவ்வாய், சூரியன், ராகு, கேது, சனி இவர்கள் இருந்தால் இருதார யோகம் என்று கூறினால் அந்த பலன்கள் மிக தவறாக முடிகிறது. காரணம், தமிழ் நாட்டின் பண்பாடும் கலாச்சார பெருமையுமே காரணம். நம் நாட்டில் பெண்களுக்கு தனி மரியாதையும் மதிப்பும் கொடுக்கிறார்கள்.
                             ஆண்களின் ஜாதகத்தில் வரப்போகிற மனைவி எப்படி இருப்பாள் என்பதை அவரது ஜாதகத்தில் சுக்ரனின் நிலைபாட்டை வைத்து கூறி விட முடியும். ஆனால், பெண்களின் ஜாதகத்தில், சுக்ரனின் நிலையை வைத்து, அவளது சௌகரியங்களை எடை போட முடியுமே தவிர, அவளது கணவனின் பராக்கிரமத்தை அறிய அந்த பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாயின் நிலை பாட்டையும், செவ்வாய் பெற்ற நட்சத்ர காலையும், செவ்வாயை பார்த்தவர்களை வைத்தும் தான் சொல்ல முடியும்.
                         எனவே, நமது இந்திய ஜோதிட முறையில், பெண்களை பற்றி அறிய மிக நுணுக்கமாக ஆராய வேண்டும் என்றும் , ஆண்களுக்கு சொல்வது போல் சொன்னால் பிழைகள் வரும் என்று இதன் மூலம் தெரிய வருகிறது.
==============================================          ===============                                             =====


வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.(composed by: Jothidamamani M. Balasubramanian, Founder, VARA)


======================================                                                  ===========================

4 கருத்துகள்:

  1. மங்கையின் ஜாதக ரகசியங்கள் கட்டுரை நன்றாக இருக்கிறது, மேலும் சந்திரனின் பாத சாரம், புதிய கோணமாக அறிகிறேன், அது விளங்கும்படி ஒரு உதாரணத்துடன் கூறுமாறு கேட்டுகொள்கிறேன்
    அன்புடன், ஆறுமுகம்.வேலூர்.

    பதிலளிநீக்கு