மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 6 மார்ச், 2013

சகடயோக ஜாதகமா? (Qus-4)கேள்வி-பதில்-4 (Question 4)

 
சகடயோக ஜாதகமா?

வணக்கம்

 
எனது கேள்வி:

நான் கடக லக்னம், மகர ராசி. . லக்னத்தில் இருந்து 7 ஆம் இடத்தில் சந்திரன் மட்டும் இருக்கிறது. இதை களத்திர தோஷம் என்கிறார்கள். இது உண்மையா? விவரியுங்கள் ....

இந்த ஜாதகம் சகட யோகம் உள்ள ஜாதகம்மா ?

லக்னத்தில் இருந்து 4 ல் கேது, 5 ல் சனி, 6 ல் செவ்வாய், 7 ல் சந்திரன், 8 ல் புதனும், குருவும், 9 ல் சூரியன், 10 ல் ராகுவும், சுக்கிரனும் உள்ளனர்..

வாசகியின் பெயர்- - - - - -- - -

 
டியர் மேடம்,

இது களத்திர தோஷம்  எனபது உண்மை இல்லை. சந்திரன் இந்த இடத்தில் இருந்தால் நல்ல அழகான கணவர் வருவார். சில நேரங்களில் காதல் திருமணம் முடிய வாய்ப்பு உள்ளது. எனவே இதை ஒரு விதமான தோஷம் என்கிர்ரர்கள். உங்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ய இடத்தில் உள்ள  சனியை வைத்து பார்க்கும் போது  உங்களுக்கு பெற்றோர்கள் பார்த்து முடிக்கும் 
மாப்பிள்ளையே அமையும்.
சகடம் என்றால் வண்டிச்சக்கரம் என்பர். சகட தோஷம் வாழ்க்கையில் எந்த அளவிற்கு உயர்ந்தாலும், மறுபடியும் பழைய ஏழ்மை நிலையையும் பார்ப்பார்கள். பிறகு மறுபடியும் உயர் நிலைக்கு வந்து நிற்ப்பார்கள். பிறகு மறுபடியும் சுழற்சி தொடரும்.

இந்த ஜாதகத்தில்  சந்திரனுக்கு குருவிற்கும் இருக்கும் தொடர்பை பார்த்தால் இது சகட தோஷம் இல்லை.


----------------------------------------------------------------------------------------------------------------------
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.

செல்: 9443540743. Vellore-632002.

 

1 கருத்து: