மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 22 மார்ச், 2013

புத்திர தோஷ பாரிகர ஸ்தலம் விரிஞ்சிபுரம் - Virinjeepuram


(புத்திர தோஷ பாரிகர ஸ்தலம் விரிஞ்சிபுரம்)

 மார்க்கத்தை காட்டும் மார்கபந்தீஸ்வரர்.வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், விரிஞ்சிபுரம் அருள்மிகு மரகதாம்பிகை சமேத மார்கபந்தீஸ்வரர் ஆலயத்தில் தற்போது பங்குனி (உத்திர) திருவிழா பத்து நாட்களுக்கு வெகு விமரிசையாக நடந்து கொண்டு உள்ளது. நேற்று 21-3-2013 இரவு சுவாமி திருகல்யாண          விழாவினை சைவ கருணீகர் குலத்தினர் ஏற்று நடத்தினார்கள். ஸ்வாமியுனுடைய திருகல்யாண போட்டோஸ்.
ஸ்வாமியின் பெயரே மார்கபந்தீஸ்வரர் என்பதால் திக்கற்றவர்களுக்கு தெய்வமே  துணை என நாம் கூறுவதால், வாழ்க்கையில் திக்கு (திசை/போகும் வழி) தெரியாமல் தவிப்பவர்களுக்கு வழி காட்டும் ஸ்தலம் இதுவே ஆகும்.
இந்த கோயில் பிரம்மனே சிறு வயதில் சிவஷர்மாவாக வந்து பூஜை செய்தார் என்றும், அபிஷேகம்  செய்யும் பொது உயரமான லிங்கம் சிறு பையனுக்காக வளைந்து கொடுத்த காட்சியை இன்றும் நாம் இங்கு பார்க்கலாம்.
லக்னத்தில் இருந்து பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடம் புத்திர தோஷத்தால் பாதிக்கப்ப ட்டவர்கள் இந்த ஸ்தலத்திற்கு வந்தால் சிவனே பிள்ளையாக பிறக்கும் எனபது கண்கூடு.
இந்த ஸ்தலம் குழந்தை பேறு இல்லாதவர்க்கு கை கண்ட இடம், பிராமகஹத்தி தோஷத்தினால் பேய், பிசாசு, பில்லி சூனியத்தால் பாதிக்க பட்டு குழந்தை வரம் வாரதவர்கள் இங்குள்ள சிம்ம குளத்தில் நீராடி இறைவனை ஈரத்துணியுடன் சாஷ்டங்கமாக படுத்து தியானித்தால் அடுத்த வருடத்திற்குள் குழந்தை பெறும் தம்பதிகள் எண்ணிக்கை எண்ணில்லடங்கா.
மேலும் இந்த கோயிலில் இயற்கையின் மூலம் துல்லியமான நேரம் காட்டும் கல்தூண்  ஒன்று உள்ளது. இது ஒரு அதிசயமாகும்.


 

9 கருத்துகள்:

 1. சாமியை நேரில் பார்த்த அனுபவம் கிடைத்ததற்கு நன்றி.
  அன்பு
  ராகவ சேகரன், T .பலூர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் அனுபவத்திற்கு முதலில் நன்றியை அந்த விரிஞ்சிபுரம் மர்கபந்தீஸ்வருக்கு தெரிவிக்கின்றேன். மிக்க நன்றி

   M.பாலசுப்ரமணியன்,

   நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம், வேலூர்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

   M.பாலசுப்ரமணியன்,

   நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம், வேலூர்.

   நீக்கு
 3. வணக்கம்.

  இந்த வார ஜோதிட குறிப்புகள் நன்றாக இருந்தது. உங்களிங் சிறப்பு கட்டுரை பயன் உள்ளதாக இருந்தது.

  இப்படிக்கு

  ஜோதிட சிகரம் B.லக்ஷ்மி நாராயணன்.

  வேலூர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி லக்ஷ்மி நாராயணன்.

   M.பாலசுப்ரமணியன்,

   நிறுவனர், VARA, வேலூர்.

   நீக்கு
 4. தங்களின் ஜோதிட பதிவு கிடைக்க பெற்றோம் மகிழ்ச்சி
  புத்திர தோஷம் நிவர்த்தி பரிகார ஸ்தலம் விரிஞ்சபுரம் மற்றும் அந்த ஆலயத்தில் நடைபெற்ற
  விழாக்களின் புகைப்படங்கள் பார்த்தேன் . இறைவனை நேரில் தரிசிக்கும் மகா பாக்கியம் கிடைக்க பெற்றேன் .
  ஷேர் மார்க்கெட் க்கு உரிய கிரகங்கள் , கிரக சேர்க்கை விபரீத கண்டங்களை ஏற்படுத்தும் கிரக சேர்க்கை
  பற்றிய உங்களின் ஜோதிட குறிப்புகள் பயனுள்ள வகையில் இருந்தது .உங்களின் ஜோதிட ஆராய்சிகள் தொடரட்டும் .
  உங்களின் ஜோதிட அனுபவங்கள் நிச்சயம் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமையும் என நம்புகிறேன் .
  உங்களின் இலக்கு பூரண வெற்றியடைய இறைவனின் கருணையும் மனித நேயமுள்ளவர்களின் நட்பும்
  உங்களுக்கு கிடைத்து மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறோம் .
  தங்களின் நல்லாசியுடன்
  சோம பழனியப்பன்
  மஸ்கட்

  பதிலளிநீக்கு