மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 23 ஆகஸ்ட், 2014

யோணி பேதங்கள் - Yoni difference

மனிதனை மிரள வைக்கும் 
யோணி பேதங்கள்

இருமணம் சேர்ந்தால் திருமணம். திருமணத்தில் சேர்ந்த இரு மணங்கள் உள்ளத்தாலும், உடலாலும் சேர்வதே இன்பம். இந்த தாம்பத்ய இன்பம் இருவருக்கும் சரிபாகமாக, அதாவது 50:50 என்றால் நிச்சயம் தினம் தினம் சொர்கத்தின் திறப்பு விழா தான். ஆனால், நிஜ வாழ்வில் எல்லோருக்கும் இது போல் அமைகிறதா என்றால்..? அதுவும் நமது இந்து சமுதாயத்தில் இதை பற்றி பேசுவதற்கே தயக்கம் என்று கூட கூறலாம்.


“இன்னாருக்கு இன்னார் என்று எழுதிட்டான் என்றும் அவ்வளவு தான் பிள்ளை குட்டியை பெற்றுவிட்டோம், இனி இந்த இன்பம் ஏது என்று உள்ளே பொருமிக்கொண்டு, வெளியில் முற்றும் துறந்த முனிவனை போல நடித்து கொண்டு வாழ்க்கையை ஓட்டுகிறோம். இதை நிறைய பேர் மறுப்பார்கள், ஆனால் அவர்கள் தம் மனத்தை தொட்டு பார்த்து கொள்ளுங்கள், உண்மை என்னவென்று புரியும்.

நடந்தது நடந்தது தான், இதற்கு விமோச்சனமே இல்லையா? என்றால் ஏன் இல்லை, உண்டு என்கிறது ஜோதிட சாஸ்திரம். இதை எப்படி அணுகுவது இதுவும் ஒரு பெரிய கேள்வி.

     1. உங்களின் நட்சத்திர யோனியை பாருங்கள், அந்த யோனிக்கு நட்பு யோனியாக இயற்கையாகவே உங்கள் கணவரோ மனைவியோ அமைந்து விட்டால் நீங்கள் “தேவனால் ஆசிர்வதிக்க பட்டவர்கள்  அப்படிஎன்றால் மற்றவர்கள் கதி...!

     2. உங்கள் நட்சத்திர யோனிக்கு நட்பு யோனியாக இல்லாவிட்டாலும் பகை இல்லாமல் இருந்து விட்டால் நீங்கள் தப்பித்தேன் “தம்பிரான் புண்ணியம்“ என்பார்களே அதுபோல எஸ்கேப் ........ ஆகிவிட்டீர்கள்.

   3. வேறு வழியில்லாமல் உங்கள் வாழ்க்கை துணை தெய்வ அனுகிரகம் இல்லாமல் பகை யோனியாக வந்துவிட்டால் உங்கள் கதி அதோ கதிதான் என்று பல ஜோதிடர்கள் கூறினாலும் நான் அப்படி கூறமாட்டேன்.

இதற்கு தான் நாம் விதி கெட்டால் மதியை பார் என்றார்கள் நமது முன்னோர்கள். எதிலும் இலைமறை காயாக வைப்பது நமது முன்னோர்கள் பழக்கம். நாம் தான் இலையை நீக்கி காயை காயாக பார்க்காமல் கனியாக பார்க்கவேண்டும். இதை அவரவர் நட்சத்திர யோனிக்குறிய மிருகங்களை வைத்து தீர்மானிக்க வேண்டும். சில விஷயங்களை வெளிப்படையாகவும் விவரிக்க இயலாதே பகுதி தான் இந்த யோனி விஷயம். தேவை படுபவர்கள் ஈமெயில் மூலம் தொடர்பு கொண்டு அறியவும்.
(இதை பார்ப்பதற்கு முன் உங்கள் இருவர் ஜாதக கட்டங்களையும் பார்த்து முடிவு செய்யவும்)


உங்கள் ஜென்ம நட்சத்திரம்     -------->    பகை யோனி நட்சத்திரங்கள்

அஸ்வினி நீங்கள் என்றால் -------à ஹஸ்தம், சுவாதி, உத்திராடம் & உத்திரட்டாதி --------à  இவர்கள் உங்கள் வேகத்திற்கும் முரட்டு தனத்திற்கும்  ஈடு தர இயலாமல் பின் தங்கி விடுவார்கள்.

பரணி நட்சத்திரமா நீங்கள் ---------à அவிட்டம் & பூரட்டாதி ---------à எல்லா பலமும் உங்களுக்கு இருந்தாலும் இவர்களுடன் இணைவதே வெறுக்க வைக்கும் செயலக நினைப்பீர்கள்.

கிருத்திகை நட்சத்திரமா நீங்கள் ----------à ரோகினி, மிருகசிரிஷம், பூராடம் & திருவோணம் -----à இவர்களுடன் நீங்கள் எந்த நேரம் எது என்று தெரியாமல் விழிப்பது.

ரோகினி நட்சத்திரமா நீங்கள் --------à  கிருத்திகை, பூசம், உத்திராடம், மகம் & பூரம். ======  பார்க்க அமைதியாக இருந்தாலும் உங்கள் சிரிப்பே இவர்களுக்கு  சீறலாக தெரியும்.
மிருகசிரிஷம் உங்கள் நட்சத்திரம் என்றால் -------à கிருத்திகை, பூசம், உத்திராடம், மகம் & பூரம் ======= உங்கள் ஹாட் (முரட்டுத்தனம்) இவர்களை அலறவைத்து விடும்.

திருவாதிரை உங்கள் நட்சத்திரமா -------à சித்திரை, விசாகம், புனர்பூசம், ஆயில்யம் ======== இவர்களிர் சிலரிடம் புலியை பார்த்து போல நீங்கள் மிரள, சிலர் உங்களை பார்த்ததும் அச்சம் கொள்வர்.

புனர்பூசம் நீங்கள் என்றால் ------à சித்திரை, விசாகம், திருவாதிரை & மூலம் ======  இவர்கள் பார்த்தவுடன் நீங்கள் பயந்தும் சிலரை பயபடுத்தியும் வைப்பதால் நினைப்பது மாறிவிடும்.

பூசம் நட்சத்திரம் என்றால் -------à ரோகினி, மிருகசிரிசம், பூராடம் & திருவோணம் ========= இவர்களிடம் எப்படி மாட்டி கொண்டோம் என்று தெரியாமல் மாட்டிகொண்டு காலம் ஓடிவிட்டது என்று அங்காலாய்ப்பீர்கள்.

ஆயில்யம் நட்சத்திரம் என்றால் --------à திருவாதிரை, மூலம், சித்திரை & விசாகம் =======  இவர்களிடம் எதையும் வாய் திறந்து சொல்ல முடியாமல் ஆசை அடங்கி போகும்.

மகம் நட்சத்திரமா நீங்கள் ------à ரோகினி, மிருகசிரிசம், புனர்பூசம் & ஆயில்யம் ======== இவர்களை பார்த்தவுடன் தாம்பத்யம் என்றாலே தடாலென்று ஓடி விடுவீர்கள்.

பூரம் உங்கள் நட்சத்திரமா --------à  ரோகினி, மிருகசிரிசம், புனர்பூசம் & ஆயில்யம் ======== மகத்தை போலவே சம்பவ இடத்திலேயே இருக்க மாட்டீர்கள்.

உத்திரம் நட்சத்திரமா நீங்கள் --------à நல்ல வேலை நீங்கள் யாருக்கும் பகை இல்லை, இருந்தாலும் எந்த வித பிரதிபலிப்பையும் காட்டமாட்டீர்கள்.

ஹஸ்தம் நட்சத்திரமா நீங்கள் ------à சித்திரை, விசாகம், சதயம் & அஸ்வினி ========== மிரளுவது, இவர்கள் வேகத்திற்கு நடப்பதும் முடியாமல் மூச்சு வீடுவீர்கள்.

சித்திரை நட்சத்திரமா நீங்கள் -----à திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், உத்திராடம் & உத்திரட்டாதி ====== உங்கள் வேகத்திற்கு இவர்கள் யாரும் வீரத்துடனும் ஓடி வருவது இல்லை.

சுவாதி உங்கள் நட்சத்திரமா -----à சித்திரை, விசாகம், அஸ்வினி & சதயம் ======== துள்ளி குதிக்கும் நீங்கள் இவர்களை பார்த்தவுடன் பிரண்டு விடவும் கூடும்.

விசாகம் நட்சத்திரமா நீங்கள் -------à திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், உத்திராடம் & உத்திரட்டாதி ==========  இவர்கள் உங்களை தட்டி எழுப்பி விட்டால் நீங்கள் ஓடும் வேகத்திற்கு இவர்கள் வரமாட்டார்கள்.
அனுஷம் உங்கள் நட்சத்திரமா ------à சித்திரை & விசாகம் ========= மென்மையான உங்களை இவர்கள் பார்த்தால் இது இனி தேவையில்லை என ஆகிவிடுவீர்கள்.

கேட்டை நட்சத்திரமா நீங்கள் -------à சித்திரை & விசாகம்  =============  மிளிர்ச்சியும் மென்மையும் கொண்ட நீங்கள் இவர்களுடன் சேர்ந்தால் சன்யாசம் தேடுவீர்கள்.

மூலம் நட்சத்திரமா நீங்கள் -----à சித்திரை, விசாகம், புனர்பூசம & ஆயில்யம் =======  இவர்களிர் சிலரிடம் புலியை பார்த்து போல நீங்கள் மிரள, சிலர் உங்களை பார்த்ததும் அச்சம் கொள்வர்.கிருத்திகை

பூராடம் நட்சத்திரமா நீங்கள் ------à கிருத்திகை & பூசம் ========== இவர்கள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றே புரியாமல் பொழுது புலர்ந்து விடும்.

உத்திராடம் நட்சத்திரமா நீங்கள் ---------à சித்திரை, விசாகம், அஸ்வினி, ரோகினி, மிருகசிரிசம் & சதயம் ==========  அமைதியின் சின்னமாக இருக்கும் நீங்கள் உங்கள் அபிலாசைகளை சொல்லவும் முடியாமல் இவர்களுக்கு இணையாக ஓடவும் முடியாமல் முழிப்பீர்கள்.

திருவோணம் உங்கள் நட்சத்திரமா -------à  கிருத்திகை & பூசம் ========== உங்கள் விருப்பத்தை புரிந்து கொள்ளாமலே உங்கள் பொழுதை வீனாக்கிவிடுவார்கள் இவர்கள்.

அவிட்டம் உங்கள் நட்சத்திரமா --------à பரணி & ரேவதி ========= உங்கள் வேகத்தையும் விருப்பத்தையும் வெறுத்து ஒதுக்க கூட இவர்கள் செய்வார்கள்.

சதயம் உங்கள் நட்சத்திரமா ----------à ஹஸ்தம், சுவாதி, உத்திராடம் & உத்திரட்டாதி --------à  இவர்கள் உங்கள் வேகத்திற்கும் விருப்பத்திற்கும் ஈடு தர இயலாமல் பின் தங்கி விடுவார்கள்.

பூரட்டாதி உங்கள் நட்சத்திரமா ------à பரணி & ரேவதி ========= உங்கள் வேகத்தையும் விருப்பத்தையும் வெறுத்து ஒதுக்க கூட இவர்கள் செய்வார்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரமா நீங்கள் -------à சித்திரை, விசாகம், அஸ்வினி, ரோகினி, மிருகசிரிசம் & சதயம் ==========  மனத்தால் இவர்கள் உங்கள் வேகத்திற்கு வரமாட்டார்கள் என்றால் நிஜத்தில் இவர்களுக்கு இணையாக ஓட முடியாமல் முழிப்பீர்கள்.

ரேவதி உங்கள் நட்சத்திரமா ----------à அவிட்டம் & பூரட்டாதி ============== மனபலம் உடல் பலம் இருந்தாலும் இவர்களுடன் இணைவதை வெறுக்க வைக்கும் செயலக நினைப்பீர்கள்.

 **********************************************************************************
உங்களுக்கு மேலும் விபரம் அறிய ஈமெயில் : jothidananban@gmail.com


சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர்  632002

Both Online & Direct Astrology Classes are undertaking


facebook: Bala Jothidar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக