மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 26 நவம்பர், 2014

விநாயகர் ஜாதகம் Vinayaga Jadhaga

வினை தீர்க்கும் விநாயகர் ஜாதகம். 







       லக்னாதிபதி செவ்வாய் வீரதீர ஸ்தானத்தில் இருந்து யோகாதிபதி குருவின் பார்வையும் படுவதால் எதிர்த்த அனைவரையும் வெற்றிகொள்ளும் திறமை உள்ளதால் கஜமுகா சூரனை வென்று வெற்றிக்கொடி நாட்டினார்.

      லக்ன கேதுவை குரு பார்ப்பதால் ஞானத்தின் உச்சானியாக இருந்து, ஓங்காரத்தின் மொத்த வடிவமாகவே அமைந்த்விட்டார். ஹஸ்த சந்திரன் என்பதால் பொறுமை  அமைதிக்கு இவரே காரணமானவர்.  எழில் களத்திர தோஷமும் சுக்ரன் நீச்சமும் லக்ன உச்ச கேதுவும் இவருக்கு இல்லறத்தில் நாட்டம் குறைந்தது
.
      ஒரு ஜாதகத்தின் இரண்டு கிரகம் ஆட்சி, ஒரு கிரகம் உச்சம் பெற்றாலே சிறப்பான ஜாதகம். இங்கு உச்சனை உச்சன் பார்ப்பதால் நீச்ச யோகத்தை பெற்ற குருவும் செவ்வாயும், தான் பெற்ற நீச்சத்தை வேறொரு ஜோதிடவிதியின் மூலம் தனது உச்ச அந்தஸ்தை தக்கவைத்து கொண்டனர்.

      அந்த வேறொரு விதி என்னவென்றால், நீச்சன் நின்ற ராசி நாதன் ஆட்சி உச்சம் பெற்றால், நீச்சபங்க ராஜயோக விதிப்படி கன்னியில் நீச்சம் பெற்ற சுக்ரன், புதனின் உச்சபலத்தால் சுக்ரனின் நீச்சம் நீங்கி அவரும் உச்ச அந்தஸ்தை அடைகிறார். ஒரு ஜாதகத்தில் ஒருவருக்கு நீச்சம் நீங்கினால் நீச்சம் பெற்ற அனைவருக்கும் நீச்சம் நீங்கும் என்ற மற்றொரு ஜோதிட விதிப்படி ரிஷபத்தில் நீச்சம் பெற்ற ராகுவிற்கும் நீச்சம் நீங்குகின்றது.

      ஆக, இவரது ஜாதகத்தில் கேது, செவ்வாய், குரு, புதன், சுக்ரன், ராகு ஆகிய ஆறு  கிரகங்கள் உச்ச அந்தஸ்துடனும், சூரியன் ஆட்சி பெற்றதும் மட்டுமல்லாமல் திக்பலம் பெற்றதும், சுக ஸ்தானாதிபதி சனி சப்தம கேந்திரத்தில் நின்று அவரும் திக் பலம் பெறுகிறார். இவரது ஜாதகத்தில் சில குறைகள் இருந்தாலும், அதிக நிறைகள் உள்ளதாலும், நம் வினைகளை போக்கும் ஞானகாரகனாக விளங்குகிறார் நம் விநாயகர்.

================================================================ 




சித்தாந்தரத்னம்,   பஞ்சங்கணிதர்,   ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
கௌரவ ஜோதிட பேராசிரியர்
சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ
வேலூர் – 632002
நிறுவனர்,  வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்

======================================================================== 

3 கருத்துகள்:

  1. ஐயா
    வினாயகரின் நட்சத்திரம் சதயம் அல்லவா?

    பதிலளிநீக்கு
  2. அருமையான ஜோதிட ஞானம் தந்த குரு பாலு ஐயாவிற்கு பனிவுடன் வணக்கங்கள்,நன்றிகள் பல....

    பதிலளிநீக்கு
  3. அய்யா, எனக்கு நவாம்சத்தில் சூரியனும், சனியும் உச்சம்... இருவரும் ஏழாம் பார்வையாக பார்த்து கொள்கிறார்கள்.....

    மற்றும் இரண்டு கிரகங்கள் குருவும் சந்திரனும் நீச்சம்....

    (வளர்பிறை ) நீச்ச சந்திரனும், சுக்கிரனும் வர்கோத்தமம்..... பலன் என்னங்க ஐயா....

    பதிலளிநீக்கு