மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 7 ஜூன், 2013

கடன் வேதனை loan problems

கடன் வேதனை 
 
 
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.
            ஜோதிடத்தில் கடன் என்பது பொதுவாக ஆறாம் இடத்தை குறிக்கும். கடன் எதற்காக பெறுகிறார் என்பதை பொறுத்து அது சற்று விரிவடைகிறது. வீடு, வாசல், வாகனம், குழந்தைகள் படிப்புசெலவு, கல்யாணசெலவு இப்படிபட்ட கடன்களை அறிய நாம் ஆறாம் வீட்டையும், ஆறில் அமர்ந்தவர்கள் பற்றியும், கடனுக்குகாரக கிரகமான சனியை பற்றியும் ஆராயவேண்டும். இலங்கைவேந்தன் ராவனேஸ்வரன் எப்படி போர்க்களத்தில் நிராயுதபாணியாக நிற்கும் போது ராமன் "இன்று போய் நாளை (ஆயுதங்களுடன் போருக்கு) வா" என்று கூறியதால், இராவணன் கடன் பட்டவர்களுக்கு எப்படி மிகுந்த வெட்கம் ஏற்பட்டு இபோழுதே இறப்பது மேல் என்று நினைப்பார்களோ அப்படி கலங்கினான். 
திருமணத்திற்கு முன்பில் இருந்தே கடனை பெறுவது, தாய் தந்தை பெற்ற கடன்களை ஏற்றுகொள்வது போன்ற கடன்களை பற்றி முழுவதும் அறிய எட்டாம் வீட்டை பற்றியும் அதில் இருந்தவர்கள், சேர்ந்தவர்கள் பற்றியும் மிக ஆழமாக ஆராய வேண்டும்.
நான் எப்பொழுதும் தண்டசெலவே செய்கிறேன் என்று சொல்பவர்களும், தீடிர் என்று பொருள்கள் பணம் திருடனால் களவாடி போவது, பெண்களிடம் நம்பி மோசம் போவது  போன்ற செயல்கள் முன்வினை கடன்கள் எனப்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு பூர்வ புண்ணிய குறைபாடு நிச்சயம் இருக்கும். இவர்களின் ஜென்ம ஜாதகத்தில் 1-5-9 குரியவர்கள் பன்னிரண்டாம் இடங்களில் இருப்பார்கள்.
லக்கினாதிபதி பலமிலந்து 6க்குடையவன் பலமானால் கடன்தொல்லை அதிகமாகவே இருக்கும். லக்னாதிபதி பலமிழந்து நீச்சமாகி கெட்டு இருந்து, ஆறாம் அதிபதி   ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தன் வாழ்வின் இறுதிநாள் வரை கடன்காரராக இருப்பார்.  
      அதே போல் பலம் பெற்ற ஆறாமதிபதி தசை கடன்களை ஏற்ப்படுத்தும், அதே போல் ஆறில் அமர்ந்த கிரகங்களின் தசையில், ஆறாமதிபதியோடு இனைந்த கிரகங்களின் தசையில் கடன்கள் உண்டாகும். அதோடு ஆறாமதிபனின் நட்சத்திரக்காலில் அமர்ந்த கிரகத்தின் தசையிலும் கடன்கள் உண்டாகும்.
மேற்கூறிய கடன்கள் நிவர்த்தி எப்பொழுது ஆகும், இல்லை கடன்காரனாகவே இறப்பார்களா என்பதை அறிய அவரவர்களின் யோகதிபதிகளின் நிலையை கொண்டும் ராகு கேதுவை கொண்டும் எளிதாக அறியலாம்.
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore-632002.

====================================================================================================
 
 

3 கருத்துகள்: