மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 8 ஜூன், 2013

எள்ளு தர்ப்பணம் - tharpanam

 எள்ளு தர்ப்பணம் 
 
 
 
                        இன்று அமாவாசை: ஜாதகத்தில் பூர்வ புண்ணிய தோஷத்தால் பீடிக்க பட்டவர்கள் அவரவர்களின் இறந்த தகப்பனாரை நினைத்து எள்ளு தர்ப்பணம் (புரோகிதர் மூலமாக அல்லது இறந்தவர்களை மனதிற்குள் நினைத்து நாமே கூட செய்து)  செய்து, யாரோ முன்பின் தெரியாத நபர்களுக்கு உணவளித்தால் தோஷத்தால் தாமதமாகும் குழந்தைகளின் திருமணம், பிள்ளைகளுக்கு வேலை கிடைக்காமல் இருத்தால், குழந்தை பேரு, வீட்டில் நிம்மதியின்மை போன்ற தரித்திர தோஷங்களில் இருந்து சிறிது சிறிதாக பூரண நிவர்த்தி கிடைத்துவிடும்.
 
நாமே தர்ப்பணம் செய்யலாமா..?
குடும்ப புரோகிதர் இருந்தால் அவர் செய்விக்க நாம் தரப்பன காரியங்களை செய்யலாம். புரோஹிதர் இல்லாத இடங்களில் இருந்தால், தர்பணத்தை நாமே செய்யாலாம். முதல் முறை மட்டும் புரோகிதரை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. கணவனை இழந்த பெண்கள் தர்பனத்தை செய்யலாம். கணவன் உள்ள பெண்கள் அமாவாசை அன்று தர்பனகாரியங்களில் இடுபடகூடாது.
 

தர்ப்பணம் எனபது:
சூரியனும் சந்திரனும் பூமிக்கு ஒரே நேர்கோட்டில் வரும் காலமே அமாவாசை.. இந்த காலங்களில் நம் முன்னோர்கள் அவரவர் சந்ததியினரை ஆசிர்வதிப்பார்கள். தர்ப்பணம் எனபது எள்ளுடன் கலந்த நீரை தெற்கு நோக்கி தாரை வார்ப்பது. வள்ளுவர் வாக்குப்படி தென்புலத்தார் பிறகு தான் தெய்வம் என்றபடி அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபட்ட பின்னரே தெய்வத்தை வழிபட வேண்டும்.
 
பித்ரு தோஷம் எனபது ஜாதகத்தில் பூர்வபுண்ணிய இடமான ஐந்தாம் இடம் பாதிக்க படுவது. இந்த தோஷம் உள்ளவர்களுக்கு எது இருந்தாலும் திருப்தி இல்லாமல் இருப்பது போல் தோன்றும். ஒரு சிலருக்கு வறுமை தாண்டவமாடும். ஒரு சிலருக்கு பிள்ளைகளினால் அசிங்கம் ஏற்பட்டு வேதனையில் புழுங்குவார்கள். ஒரு சிலருக்கு கற்பசிதைவு ஏற்பட்டு விடும். ஒரு சிலருக்கு பிள்ளைகள் என்ன செய்தாலும் பிறக்காமல் கூட போய்விடும்.
தர்பனத்தை தொடர்ந்து செய்து  முடிந்த வரை அன்னதானம் செய்து வருபவர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

 
=======================================================================================================

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.



சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.

செல்: 9443540743. Vellore-632002.


====================================================================================================

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக