மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 12 ஜூன், 2014

குரு மாற்றம் - மக்களுக்கு (தேதி) தடுமாற்றமா..? Guru Date

குரு மாற்றம் - மக்களுக்கு (தேதி) தடுமாற்றமா..?


                ஒவ்வொரு ஜோதிடரும் குரு பெயர்ச்சியை ஒவ்வொரு தேதி என்கிறார்கள். ஒரே குழப்பமாக உள்ளது என்று மக்கள் நினைக்கிறார்கள். சிலர் ஏது எங்கே மாறினால் எனக்கென்ன என்று கூறுவார்கள், ஆனால் குரு பெயர்ச்சி பலனை மட்டும் ஓரக்கண்ணால் படிப்பார்கள், அப்படியே அவரது சொந்தங்களுக்கும் படிப்பார்கள். ஆக, இன்றைய சுழலில், உலகம் முழுவதும் ஜோதிடத்தை நம்புகின்றது. காரணம் இதில் உண்மை இருப்பதனால் தான்.
               வாக்கிய பஞ்சாங்கத்தில் 13-6-2014 என்றும், திருக்கணித பஞ்சாங்கத்தில் 19-6-2013 தேதியும் மாறுவதாக கணித்துள்ளனர். இதில் ஏது சரி என்று சொன்னால் ஒரு பெரிய சர்ச்சையே வந்து விடும்  (எனது தனிப்பட்ட் கருத்தை இங்கு வெளியிடவில்லை.)
             எது எப்படியோ, குரு தற்போதுள்ள மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்லுவது உண்மை. அதாவது அவர் 120 இருந்து  121 டிகிரிக்கு செல்கிறார். இதனால் நிச்சயம் பூமியில் வசிக்கும் ஜீவன்களுக்கு சாதக பாதகங்கள் நடப்பதும் உறுதி.
           குரு பனிரெண்டு வருடங்களில் பனிரெண்டு ராசிவழியாக சூரியனை ஒரு முறை சுற்றுகிறார். அதாவது ஒரு ராசியை கடக்க தோரயமாக ஒரு வருடம் ஆகின்றது. சரியாக 13-6-2014 தேதி மாலை 5 மணிக்கு டக்கென்று கடகத்திற்குள் துள்ளி குதிப்பதில்லை குரு. மிக மிக மெல்லமாக நுழைகிறார்.
           ஆக, மக்கள் இதே தேதி, இதே நேரத்தில் போய் குருவை கும்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த நேரத்தில் தான் கோவிலிலும் பூஜை செய்வார்கள். வருட கிரகம் ஒரு ராசிக்குள் நுழைவதற்கு முன்னாலே ஒரு மாதத்திற்கு முன்பே அந்த ராசியின் தன்மை வந்து விடும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அப்படி என்றால் குரு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கும் முன்பே கடக ராசியில் நுழைந்த பலனை தர ஆரம்பித்து விட்டார்.

             அப்படி இருக்க, ஏன், முட்டி, மோதி கொண்டு கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டு குருவை வழிபடுவது. ஆற, அமர குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு ஓய்வு நேரத்தை குறித்து கொண்டு, பொறுமையாக கோவிலுக்கு சென்று, நவகிரகம் இருக்கும் சன்னதிக்கு சென்று, நவகிரகங்களில் வடக்கு முகமாக யானை வாகனத்தில் இருக்கும் பிரஹஸ்பதி என்கின்ற குருவை வழிபடவும். நிச்சயம் குருவின் பார்வை உங்கள் மீது பட்டு மங்களகரமான வாழ்வு வரும்.>>Bala Jothidarசித்தாந்த ரத்னம்பஞ்சங்க கணிதர்ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002
ஈமெயில்: jothidananban@gmail.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக