மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 24 ஜூன், 2014

இரட்டை வருமானம் வேண்டுமா..? double income

உங்களுக்கு இரட்டை வருமானம் வேண்டுமா..?


          இரட்டை வருமானத்தை சுலபமாக காண, உங்கள் லக்னத்திற்கு பத்தாம் இடத்தை பாருங்கள் அந்த இடம் மிதுன ராசி அல்லது மீன ராசியாக உள்ளதா என்று. அப்படி இருப்பின் உங்களுக்கு இரட்டை யோகமே. இதை வருமானத்திற்கு மட்டும் பார்க்கவும்... இதே ராசிகள் ஐந்தாம் இடமாக வந்தால் இரண்டு குழந்தைகள். . நாலாம் இடத்தில் வந்தால் இரண்டு வீடுகள். . இரண்டு வாகனங்கள். . . ஆறாமிடமாக வந்தால் இரண்டு விதமான வியாதிகள். . எதிரிகள். . ஒன்பதமிடமாக வந்தால் இரட்டை யோகம்..double பாக்கியம். லக்னமாக வந்தால் இரட்டை மனசு. . எழாமிடமாக வந்தால் . . (சட்டப்படி ஒன்றே ஓன்று தான்)  

ஆக , இரட்டை வருமானம் உள்ள ராசிகள்:
கன்னி ராசிக்காரர்கள்: இவர்களுக்கு, ஜீவன ஸ்தானமாக மிதுன ராசி உள்ளதால் ஏதோ ஒரு வகையில் இரண்டு வருமானம் வரும்.
மிதுன ராசி காரர்களுக்கு: இவர்கள் மனமே இரட்டை, இவர்கள் பத்தாமிடமும் இரட்டை ஆக, நிச்சயம் மிதுன ராசியினருக்கு இரட்டை யோக வருமானம்.
இதை ராசிக்கும் பார்க்கலாம், லக்னத்திற்கும் பார்க்கலாம், இதில் எது அதிக பலமோ அதை முதலில் பார்க்க வேண்டும். 
மற்றும் ஜீவன ஸ்தானத்தில் இரண்டு கிரகங்கள் இருந்தாலும் இரட்டை வருமானம் உண்டு, இதில் அங்கு உள்ள கிரகம், கிரக யுத்தம், அஷ்டாங்க தோஷம், பாம்புகளுடன் இணைவு போன்றவை இல்லாமல் இருக்க வேண்டும். பாம்புகளுடன் எத்தனை கிரகம் இணைந்தாலும் அத்தனை கிரகங்களின் பலனையும், அதாவது கிரக காரக பலன்களை பாம்பு கிரகமே கொடுக்கும் என்பதையும் இங்கு கணக்கில் கொள்ள வேண்டும்.  மேலுமஅவரவர் ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்களையும் பார்த்து முடிவு பண்ணுவதே சிறப்பு.சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002
CELL: 9443540743

Both Online & Direct Astrology Classes are undertaking
Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
facebook: Bala Jothidar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக