மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 8 ஜூன், 2014

குரு என்பவர் யார்? Who is Guru?

குரு என்பவர் யார்?

குரு வியாழனா..?   குரு தட்சிணாமூர்த்தியா…?




            குரு பெயர்ச்சி என்று அவ்வப்பொழுது ஜோதிடர்கள் சொல்லுகிறார்களே...இதன் பொருள் என்ன என்று நிறைய பேருக்கு இன்னும் தெரியவே இல்லை. ஏன், சில ஜோதிடர்களுக்கு கூட இதன் பொருள் தெரியவில்லை என்றே கூறலாம். 
            காரணம், ஜாதகத்தில் குரு நீச்சமாகியோ, 6-8-12 –இல் மறைந்து இருந்தாலோ, அல்லது சூரியனுடன் சேர்ந்து அஸ்தமன தோஷம் பெற்று இருந்தாலோ, அல்லது கோச்சார குரு ஜென்மராசிக்கு 1-3-4-6-8-10-12–இல் இடம் பெயர்ந்தாலோ உங்களுக்கு குரு தோஷம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி நீங்கள் ஒவ்வொரு வியாழன் கிழமையும் குரு தக்ஷினாமூர்த்திக்கு சென்று கடலை மாலை போட்டு, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, முடிந்தால் அந்தணனுக்கு தானம் கொஞ்சம் செய்யுங்கள் என்று கூறுகிறார்கள்.
          ஆனால் உண்மையில் கிரக மாற்றம் நவகிரகங்களில் உள்ள குரு என்கின்ற வியாழனுக்கு தானே தவிர சிவனின் மறுஅம்சமான தக்ஷினாமூர்த்தி அல்ல. கிழ்கண்ட வித்தியாசங்களை நீங்கள் பார்த்தால் நமக்கு நன்கு புரியும்.


குரு என்கின்ற வியாழன்
குரு என்கின்ற தட்சிணாமூர்த்தி
சூரியனை சுற்றுகின்ற நவகிரகங்களில் ஒருவர் தான் குரு என்கின்ற வியாழன்.
அண்டச்சாராச்சரங்களின் அதிகாரி. சிவமூர்த்தங்களான நடராஜர், பிட்சாண்டவர், போல் தக்ஷினாமூர்த்தி. அதாவது சிவரூபம். பரமேஸ்வரனின் அம்சம்.
சிவன் இவருக்கு இந்த நவகிரகத்தில் குரு பதவியை தந்தார்.
இவரே சிவனாக உள்ளார்.
சூரியனை சுற்றும் கிரக வரிசையில் இவர் ஐந்தாவது வட்டத்த்தில் சுற்றுகிறார்.
இவர் யாரையும் சுற்றுவது இல்லை. கோடிகணக்கான சூரியர்கள் இவரை சுற்றுவதாக சாஸ்திரம் சொல்லுகிறது.
பூமியில் உள்ள ஜீவன்களை தமது 5-7-9 வது பார்வைகளால் பார்த்து லவ்கிக சுகங்களை தருகிறார்.
அண்டத்தில் உள்ள ஜீவராசிகளின் தன்மைக்கேற்ப ஞானதீட்சை அளிப்பவர்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் என்ற ஐந்தொழில் ஆற்றுபவர்.
கடலை சுண்டல். மஞ்சள் வஸ்திரம். கனக புஷ்பராகம் இப்படி பல பரிகாரகங்களை செய்தால் மனம் மகிழ்பவர்.
உயர்ந்தஅறிவும் தூயஅன்பும் தான் இவருக்கு தேவை.
நல்ல புத்தி, சத்புத்திரன், தனம் தருபவன், குடும்ப சந்தோஷத்தை தருபவன். பணப்பெட்டிக்கு அதிகாரி.
குடும்பம், மனைவி, சொத்து, சுகம் இவைகளை விட்டவர்களுக்கு மோட்சம்   அருளுகிறார்.
இவர் தேவ குரு என்றும்  பிரஹகஸ்பதி என்றும் அழைக்கபடுகிறார். இவருக்கு எதிரியாக அசுர குருவான சுக்ரன் உள்ளார்.  யானை வாகனம் உள்ளவர். சூரிய மண்டலத்தில் வடக்கு இவரது பகுதி.
இவர் கல்லாலமரத்தின் கிழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கும், நந்தி தேவருக்கும் ஆதி குருவாக உள்ளவர். பயில்பவர்கள் வடக்குமுகமாக இருப்பதால் இவர் தெற்கு முகமாக அமர்ந்துள்ளார். அண்டச்சாராசரத்தின் ஆதிக்கும் அந்தத்திற்க்கும்  இவரே அதிபதி. அறியாமை என்கின்ற இருளை போக்குபவர். ஆணவ மலமான முயலகனை காலடியில் வைத்துள்ளார்.
இவர் அந்தணன் ஜாதி.
ஜாதி, மதம், குலம் இவற்றிற்கு அப்பாற்பட்டவன்.
சத்துவ குணம் உள்ளவர்.
சத்துவ, ரஜோ, தம்ஸ என்கின்ற முக்குனத்தையும் கடந்தவர். ஜாக்ருதி, ஸ்வப்னா, சுஷுக்தி, நிலைகளை கடந்தவர்.
ஆங்கிரச முனிவரின் மகனாக பிறந்த இவருக்கு இறப்பும் உண்டு, மறுபடியும் பிறப்பும் உண்டு.
இவருக்கு தாயுமில்லை, தந்தையுமில்லை. பிறப்பு இறப்புவிற்கு அப்பாற்பட்டவன். காலகாலன் இவரே.
இவருக்கு மூன்று மனைவிகள் சுபா, தாரா, மம்மதா. எட்டு பெண் குழந்தைகளும் ஒன்பது ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
இவரே பதியாக உள்ளதால், பசு பாசம் கடந்தவர்.
ஜோதிடசாஸ்திரப்படி இவருக்கு தனுசு, மீனம் ராசிகள் ஆட்சி, கடகத்தில் உச்சம், மகரத்தில் நீச்சம். மேலும் இவர் பூனர்பூசம், விசாகம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிகாரி.
அண்டத்தில் உள்ள அத்தனை சாஸ்திரமே இவர்தான்.
இவர் ஆகாஷ் தத்துவத்தில் இருப்பவர்.
இவர் பஞ்சபூத தத்துவம் அனைத்தும் கடந்தவர்.
இவருக்கு மேல் அதிதேவதை ஒருவர் உள்ளார்.
இவருக்கு மேல் ஒருவரும் இல்லை.

>>>>>

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002
ஈமெயில்: jothidananban@gmail.com




1 கருத்து:

  1. ஆலங்குடி யில் குரு தெட்சிணாமூர்த்தி க்கு வழிபாடு செய்யப்படுகிறது. திட்டையில் குருவாக வழிபடப்படுபவர் குருபகவான் அல்ல. அக்கோயிலை கட்டிய மன்னனின் ராஜகுரு ஆவார். தஞ்சையில் கருவூர் சித்தருக்கு தனி சன்னதி அமைத்த ராஜராஜ சோழனை போல அம்மன்னன் தனது ராஜகுருவுக்கு தனி சன்னதி அமைத்தான். சித்தரை தெய்வமாக மாற்றி வழிபடுவது மாபெரும் தவறு.ஆதாரம்-அவ்வூர் செவிவழிச் செய்தி,திட்டை குரு சொரூபம்,சன்னதி அமைந்துள்ள இடம்.

    பதிலளிநீக்கு