மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 18 அக்டோபர், 2012

Jothidasri S. Parimala's son Marriage

வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்க உறுப்பினர்
திருமதி S.பரிமளா அவர்களின்
 செல்வமகன் திரு S.கார்த்திக் .,BE.,MBA. 
& செல்வி S.அர்ச்சனா, B.Sc.,MBA
 
அவர்களின் திருமணம் இன்று (18-10-2012) காலை வேலூர் ஆபீசர்ஸ் லைன் ராணி மஹால் மண்டபத்தில் இனிது நடைபெற்றது. மணமக்களை முன்னதாக சங்க தலைவர் Prof.K.சண்முகம், சிறப்பு செயலர் ஜோதிடசிகரம் D .ரவிக்குமார் , துணைத்தலைவர் ஜெயராதே ,முன்னாள் பொருளாளர் புருஷோத்தமன், பொருளாளர் ஜோதிடஸ்ரீ சாமு மற்றும் நமது ஜோதிட நண்பர்கள் தத்தமது வாழ்க்கை துணைவர் / துணைவியுடன் வந்திருந்து வாழ்த்தினார்கள். அவ்வமயம் நமது சங்க நிறுவனர் ஜோதிடமாமணி M.பாலசுப்ரமணியன் அவர்கள் தமது இல்லத்தரசியுடன் வந்திருந்து  மணமக்களை வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின் 
எல்லா உறுப்பினர்கள்  சார்பாக வாழ்த்தினார்கள். மணமக்கள் வாழ்க பல்லாண்டு.
திருமண லக்னம். : இன்று விருசிக லக்னத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த லக்னத்தை கோச்சார குரு பார்ப்பதால் இந்த திருமண நேரம் மிக நல்ல நேரம் என்று சிறப்பு செயலர் ஜோதிட சிகரம் ரவிக்குமார் கூறியது பாராட்ட தக்கதாக அமைந்தது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக