மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 30 நவம்பர், 2012

சமிக்ஞைகள் Plenatary Signals

 கிரக --->>   சமிக்ஞைகள் 
Plenatary signals       சமிக்ஞைகள் என்பது கிரகங்கள் சொல்லாமல் சொல்லும் நடத்தைகள். இது உங்களுக்கு சற்று எளிதில் புரிவது கடினம் தான். இதற்கு  தகுந்த உதாரணம் : ஒரு பெண்ணும் ஒரு பையனும் யாருக்கும் தெரியாமல் காதலிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளவோம். இவர்கள் தனது நண்பர்கள் அல்லது பெற்றோர்கள் முன்னிலையில் தீடீர்  என்று சந்தித்து கொண்டால் எப்படி பேசுவார்கள். அந்த நேரத்தில் வாய் பேசுமா? பேசாது. கை பேசுமா? பேசாது. ஆனால்  கண்கள் பார்பதோடு இருக்குமா? கண்கள் பேசாத? கண்டிப்பாக கண்கள் பேசும், ஆனால் கூட இருக்கும் பெற்றோர்களுக்கு இவர்கள் கண்கள் பேசியது தெரியுமா? காதலனின்  சமிக்ஞைகள்  காதலிக்கு எளிதில் எப்படி புரியுமோ, அது போல ஒரு சிறந்த ஜோதிட வல்லுனருக்கு ஜாதகத்தை பார்த்தவுடன் கிரகங்களின்  சமிக்ஞைகள் தெரிந்து விடும். இந்த  சமிக்ஞைகள் வெளிபடையாக பார்த்தல் எதுவும் புரிந்து கொள்ள முடியாது, ஆனால் உற்று நோக்கும் பொது காதல் வசப்பட்டவருக்கு எப்படி டக் என்று புரியுமோ அதுபோல ஜோதிட காதல் வசப்பட்ட ஜோதிடனுக்கு டக் டக் என்று புரிந்துகொள்வான். 

        சமிக்ஞைகள்  நான்கு விதமாக பிரித்துள்ளனர். 1. பாசகர், 2. போதகர், 3. காரகர் மற்றும் 4. வேதகர். இந்த  சமிக்ஞைகளை நாம் கோட்சாரத்தில் கிரகங்கள் மாறுவதனால் ஏற்படும் பலன்களாகும். இதே பலன்கள் கிரகங்கள் தத்தமது தசா புக்தி காலங்களிலும் மேற்படி கிரகம், ஜென்ம ஜாதகத்தில் இந்த நான்கு நிலைகளில் எந்த நிலையில் உள்ளதோ அதற்கு ஏற்றால் போல் பலன்களை மாறுபட்டு செய்கிறது.

பாசகர்

சூரியனுக்கு 6 இல் நிற்கும் சனி 
சந்திரனுக்கு 7இல் நிற்கும் சுக்ரன் 
செவ்வாய்க்கு  2இல் நிற்கும் சூரியன் 
புதனுக்கு 2 இல் நிற்கும் சந்திரன் 
குருவுக்கு 6இல் நிற்கும் சனி 
சுக்ரனுக்கு 2 இல் நிற்கும் செவ்வாய் 
சனிக்கு 3 இல் நிற்கும் சுக்ரன் 

இந்த கிரகங்கள் பாசகர் அந்தஸ்தை பெறுகிறது. இந்த கிரகங்கள் சீக்கீரத்தில் ஜாதகருக்கு நற்பலன்களை தந்துவிடும். சொல்ல போனால் இவகைகள் யோக கிரகங்கள் எனலாம்

 போதகர் 

சூரியனுக்கு 7 இல் நிற்கும் செவ்வாய் 
சந்திரனுக்கு 9இல் நிற்கும் செவ்வாய்  
செவ்வாய்க்கு  6இல் நிற்கும் சந்திரன்.
புதனுக்கு 4 இல் நிற்கும் குரு.
குருவுக்கு 5 இல் நிற்கும் செவ்வாய்.
சுக்ரனுக்கு 6 இல் நிற்கும் புதன்.
சனிக்கு 11 இல் நிற்கும் சந்திரன்.

இந்த கிரகங்கள் போதகர்  அந்தஸ்தை பெறுகிறது. இந்த கிரகங்கள்  ஜாதகருக்கு நிறைய நற்பலன்களை தந்துவிடும். சொல்ல போனால் இவகைகளும்  யோக கிரகங்கள் என்றே கூறலாம்.

 காரகர்

சூரியனுக்கு 9 இல் நிற்கும் குரு
சந்திரனுக்கு 11 இல் நிற்கும் சனி.
செவ்வாய்க்கு  11 இல் நிற்கும் சனி.
புதனுக்கு 5 இல் நிற்கும் சுக்ரன்.
குருவுக்கு 7 இல் நிற்கும் சந்திரன்.
சுக்ரனுக்கு 12 இல் நிற்கும் சூரியன்.
சனிக்கு 6 இல் நிற்கும் குரு.

இந்த கிரகங்கள் காரகர் அந்தஸ்தை பெறுகிறது. இந்த கிரகங்கள்  ஜாதகருக்கு மிக நிதானமாக அனைத்து நற்பலன்களை தரும். very late.  அதாவது, ஒரு கிரகம் தனது தசா புக்தியில் அல்லது  கோட்சாரம்  காலம் முடிவடைவதற்குள் பலன்களை செய்துவிடும்

 வேதகர் 

சூரியனுக்கு 11 இல் நிற்கும் சுக்ரன்
சந்திரனுக்கு 3 இல் நிற்கும் சூரியன்.
செவ்வாய்க்கு  12  இல் நிற்கும் புதன்.
புதனுக்கு 3  இல் நிற்கும் செவ்வாய்.
குருவுக்கு 12 இல் நிற்கும் சூரியன்.
சுக்ரனுக்கு 4 இல் நிற்கும் சனி.
சனிக்குஇல் நிற்கும் செவ்வாய்.

இந்த கிரகங்கள் வேதகர் அந்தஸ்தை பெறுகிறது. இந்த கிரகங்கள்  நல்ல அமைப்பு பெற்று இருந்தாலும் ஜாதகருக்கு நற்பலன்களை வாராமல் தடை செய்து விடும். கிரகங்கள் யோகதிபதியாக இருந்தாலும் வேதக நிலையை அடைந்து நற்பலன்களை கெடுத்து விடும்

        குரு கிரகத்திற்கு பாசகர் நிலையும் வருவதில்லை அதே போல் வேதகர் நிலையம் வருவதில்லை. ராகு கேது கிரகங்கள் இந்த பட்டியலில் இடம் பெறுவதில்லை. ஜாதகத்தில் யோககிரகங்கள் கூட இந்த நான்கு நிலைகளை பொறுத்து தான் பலன்களை தருகிறது

இந்த கிரகசமிக்ஞைகளை பார்த்து நம் கண்களும் சிமிட்ட தான் செய்கிறது.

 composed by Jothidamamani M.Balasubramanian, Founder, VARA, Vellore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக