மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 7 நவம்பர், 2012

Tamil Translation of Ravirajan's poem

வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்க ஜோதிடர்கள் சென்ற சுற்றுலா வை பற்றி நண்பர் திரு ரவிராஜன் அவர்கள் எழுதிய ஆங்கில எழுத்துக்கள் அடங்கிய கவிதையை நமது மஸ்கட் ஜோதிட அன்பர்
திரு சோம. பழனியப்பன் அவர்கள் தமிழில் மொழியாக்கம் செய்து அனுப்பி உள்ளார். இதை நமது வாசர்களுக்கு சமர்பிக்கிறேன். மஸ்கட் சோம. பழனியப்பன் அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.


ஜோதிடர் அய்யா ஸ்ரீ ரவி ராஜன் அவர்கள் ஆங்கிலத்தில்

வாசகர் கருத்து பகுதியில் தந்ததை வாசக அன்பர்கள்

எளிமையாக படிக்க தமிழில் தருகிறோம் .

இனிய சுற்றுலா இன்ப சுற்றுலா !!!!

அதுவே நம் ஜோதிட சுற்றுலா !!!!

கனிகள் மூன்று ( 3 )

வென்றவர்கள் மூன்று ( 3 )

மூர்த்திகள் மூன்று (3 )

அது போல் நாம் தரிசித்த திருத்தலங்கள் மூன்று ( 3 )

அதில், ஆதி திருவரங்கம் - பிரம்மாண்டம்

திருவதிகை ஈஸ்வரம் - கம்பீரம்

கோவிலூர் உலகளந்த பெருமாள் - நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட பெருமாள்

தரிசித்த இத்திருதலங்களில்

நிழற் படங்கள் அனைத்தும் , இனிய நல்முத்துக்களாம்

முத்துக்களை மூழ்கி எடுத்த சகோதரர் அருவிற்கு நன்றி நவிலலாம்!!!!

மூழ்கி எடுத்த முத்துக்களை மாலையாக மாற்றிய

நம் குரு பாலு அய்யாவை வணங்குவோம் !!!

சுற்றுலாவில் அறுசுவை உணவு படைத்த

சகோதரர்கள் சாமு , ஜெயாவை உள்ளளவும் நினைப்போம் !!!!

சோம .பழனியப்பன் , மஸ்கட் .

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக