மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 29 ஏப்ரல், 2013

தடையில்லா தாம்பத்யம்.Marital Pleasures


தடையில்லா தாம்பத்யம்.

                   அஸ்வினி நட்சத்ர ஆண் சதய நட்சத்திரம் கொண்ட பெண்ணை மணந்தால் பரஸ்பர யோனி பொருத்தத்தால் தாம்பத்ய சுகம் வாழ்வில் கூடும். கணவன் மனைவி சண்டை இருக்க வாய்ப்பு இல்லை.
இதே போன்று பரணி நட்சத்திரம் கொண்ட ஆண் ரேவதி நட்சத்திரம் கொண்ட பெண்ணை மணந்தால் இதே அளவு சந்தோசம் பெறுவார்கள்.
                    ரோகினி நட்சத்திரம் கொண்ட ஆண் மிருகசிரிஷம் நட்சத்திரம் கொண்ட பெண்ணை திருமணம் செய்வதும், திருவாதிரை நட்சத்திரம் கொண்ட ஆண் மூலம் நட்சத்திரம் கொண்ட பெண்ணையும், பூசம் நட்சத்திரம் கொண்ட ஆண் கிருத்திகை நட்சத்திரம் கொண்ட பெண்ணையும், ஆயில்யம் நட்சத்திரம் கொண்ட ஆண் பூனர்பூசம் நட்சத்திரம் கொண்ட பெண்ணுடனும், மகம் நட்சத்ரம் கொண்ட ஆண் பூரம் நட்சத்திரம் கொண்ட பெண்ணையும், சித்திரை ஆணுடன் விசாகம் பெண் சேர்வதும், கேட்டை ஆணுடன் அனுஷம் பெண் இணைவதும், பூராடம் நட்சத்திரம் கொண்ட ஆண் திருவோணம் நட்சத்ரம் கொண்ட பெண்ணை திருமணம் செய்வதும், பூரட்டாதி நட்சத்திரம் கொண்ட ஆண் அவிட்டம் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் தம்பத்யசுகம் தொடர்ந்து 100 % இருக்கும். இவர்கள் இடையில் மனகசப்பு இருக்காது. ஒருவர் சொல்வதை மற்றொருவர் இமை கொட்டாமல் கேட்ப்பார்கள்.
              மேற்கூறிய ஆண் பெண் நட்சத்திரங்கள் மாறி இருந்தால் 75 % இன்பத்திற்கு குறைவில்லை.ஜென்ம ஜாதகத்தில் அயன சயன போக பாக்கிய இடம் சற்று சறுக்கினாலும் இது போன்ற கூட்டு இன்பத்தை பன்மடங்கு பெருக்கி விடும்.

=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.
  Vellore-632002.


====================================================================================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக