மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

தூக்கமும் கண்களை தழுவட்டுமே. SOUND SLEEP


தூக்கமும் கண்களை தழுவட்டுமே. SOUND SLEEP
 


               அவரவர் ஜென்ம ஜாதகத்தில் 12-ம் இடம் நல்லபடி இருந்தால் sound sleep. பன்னிரண்டாம் இடத்தில் பாவ கிரகம் இருந்தால் தூக்கம் தொலைந்து போகும். இந்த 12-இல் சூரியன் அல்லதுசெவ்வாய் இருந்தால் டென்ஷன் ஏறி உஸ்ணத்தால் தூக்கம் இன்றி தவிப்பர். கேது இருந்தால் விரக்தியுடன் தூங்க நேரிடும். சனி இருப்பின் ஏதோ ஒரு வலியுடன் தூங்கி தூங்காமல் இருப்பர். சுக்ரன் இருப்பின் பெண் துணையுடனே தூங்குவர். சந்திரன் இருந்தால் சந்தோஷத்துடன் தூங்க செல்வர். ராகு 12-இல் போதையுடன் தூங்கியதே தெரியாமல் தூங்கி விடுவார்கள். குரு நின்று விட்டால் தெய்வ பிரார்த்தனையுடன் நன்கு தூங்குவர். புதன் கெடாமல் இருந்து விட்டால் பாட்டு கேட்டு கொண்டே தூங்குவர்.
               அந்த புதன் சனி வீடுகளான மகரம் அல்லது கும்பத்தில் இருந்தாலோ அல்லது சனி நட்சத்திரமான அனுஷம், உத்திரட்டாதி, பூசம் இவைகளில் நின்றாலும், ஜாதகர் பழைய சோக பாடல்களை படுக்கும் போது விரும்பி கேட்பார். இதே புதன் ரிஷபம், துலாம் மற்றும் சுக்ர நட்சத்திரங்களில் இருந்து விட்டால் காதல் பாடல்களை கேட்டு கொண்டே தூங்க போவார். இதே புதன் 12-இல் குரு வீடுகளில் இருந்து விட்டால் பக்தி பாடல்களை கேட்ட பின்னரே தூங்க செல்வார். 12-இல் உள்ள இதே புதன் தனது சுய சாரத்தில் அல்லது சுய வீடுகளான மிதுனம் அல்லது கன்னியில் நின்று இருந்தால் ஜாதகர் கர்நாடக சங்கீதத்தில் மனதை பறிகொடுத்து கொண்டே தூங்கிவிடுவார். நிறைய தூங்குபவருக்கு BP, டென்ஷன், சர்க்கரை வியாதி, தோல் வியாதிகள் வருவதற்கு தயங்கும். ஆக, வாசகர்களே நீங்கள் இன்னுமா வில்லை? சீக்கிரம் தூங்க செல்லுங்கள். ஓகே. குட் நைட்
---------------------------------------------------------------------------------------------------------------------------

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore-632002.


====================================================================================================
 

2 கருத்துகள்:

  1. en jathagathil 12 place vacant. 12 place noted by guru,sukiran,sani.how is my sleep prediction? pl.

    பதிலளிநீக்கு
  2. பன்னிரண்டாம் இடம் காலியாக இருந்தாலே தூக்கம் நன்கு இருக்கும். உங்களுக்கு இந்த இடத்தை இரண்டு சுபர்கிரகங்களும், ஒரு பாவ கிரகமும் பார்ப்பதால், தூக்கம் தடை வரும் என்று நீங்கள் நினைக்கும் போது, குரு பார்வைக்கு அதிக பலம் உள்ளதால் உங்களுக்கு, இந்த தடை நீங்கி நன்றாகவே தூங்குவீர்கள்.

    பதிலளிநீக்கு