மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 16 ஜூலை, 2013

வழுக்கை மண்டை யாருக்கு? Bald Head

வழுக்கை மண்டை யாருக்கு அமையும்.?
  
                                         நரைத்த மண்டை உள்ளவன் முடி உள்ளவனை பார்த்து பொறாமை படுவான். வழுக்கை மண்டை உள்ளவன் நரைத்த மண்டையை பார்த்து பொறாமை படுவான். கடைசியில் வழுக்கையை பார்த்து எல்லோரும் கிண்டலும் கேலியுமாக பேசுவார்கள். என்ன செய்வது, கூந்தல் உள்ளவள்  எப்படி வேண்டுமானாலும் முடித்து ொள்வாள். முடியே இல்லாதவன் என்ன செய்வான்? இன்றைய நவீன உலகில் இதற்கும் செயற்க்கையகவும், இயற்கையாகவும் வழிகளை நமது மருத்துவர்கள் செய்துவிட்டனர்.  ஒரு பாமரன் என்ன செய்ய முடியும்?
 
ஜோதிட காரணம்:
வழுக்கை மண்டை ஏன் வருகிறது..? உண்மையில் அறிவியல் காரணம் ஏதோ இருக்கும்.
                     ஜோதிட ரீதியாக லக்னத்தில் சூரியன் இருந்தாலோ, அல்லது சூரியன் செவ்வாய் கூட்டுசேர்ந்து லக்னத்தில் இருந்தாலோ அல்லது சந்திரன் சூரிய நட்சத்திரமன கிருத்திகை முதல் பாதம், உத்திரம் முதல் பாதம், உத்திராடம் முதல் பாதம் இவைகளில் இருந்தாலும் இந்த அமைப்புகளுடன் குரு சந்திரனையோ அல்லது லக்னத்தையோ பார்க்காமல் இருந்தால் இது போன்ற ஷைனிங் மண்டையை பெறலாம்.
                       லக்னம் என்கின்ற தலைபகுதியில் அக்னி கிரகங்கள் தங்கி விட்டால் தலையில் உள்ள அனைத்து முடியையும் பொசுக்கிவிடும். லக்னத்தில் விரக்தி மிகுந்த கிரகமான கேதுவுடன் வேறு கிரகங்கள் சேர்ந்து விட்டால் செம்மட்டை அல்லது வெள்ளைமுடி வந்துவிடும். லக்னத்தில் ராகு இருந்துவிட்டால் முடி என்னவோ கருப்பாக இருக்குமே தவிர அங்கங்கே புழுவெட்டு காரணமாக நிறைய தீவு கூட்டங்கள் இருக்கும். சந்திரனும் லக்னமும் ஒரே ராசியாகிவிட்டால், ஆரம்பத்தில் அடர்த்தியான கருகருவென்ற முடி முளைக்கும், நாற்பதை தாண்டிவிட்டால் கொட்டோ கொட்டு என்று தினமும் முடி கொட்டி கொண்டே இருக்கும். லக்னசனி அமைந்துவிட்டால், ஈரும், பேணும், கூடவே பெருச்சாலியும் மேயும். ரதியோத்த கூந்தலை பெறவேண்டுமானால், லக்னத்தில் சுக்ரன் இருந்து, அதற்கு ஐந்து ஒன்பதுகளில் குரு நின்று இருந்தால், ரதி-மன்மத கூந்தல் வந்துவிடும். பிறகு இதற்கு இயற்கையிலே மனம் உண்டு என்று வாதட தோன்றும்.


 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
 
 

====================================================================================================

 

5 கருத்துகள்: