மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 13 ஜூலை, 2013

எதிரிகளை வசபடுத்துவது எப்படி..? eliminate enemy

எதிரிகளை வசபடுத்துவது எப்படி..?                         அவரவர் ஜென்ம ஜாதகத்தை கொண்டு ஆறாமாதி எப்படி உள்ளார், அவர் யாரு சாரம் பெற்று பலத்துடன் உள்ளாரா இல்லை நட்பு சாரம் பெற்று கூட இருந்து குழி பறிக்கும் எண்ணத்துடன் உள்ளாரா என முதலில் அறியவும். பிறகு, உங்கள் லக்னத்திற்கு மாற்று கருத்துடைய லக்னம் ஏது? அதன் அதிபதி யாரு? என அறியவும். பிறகு உங்கள் லக்ன பலம் எப்படி உள்ளது? உங்கள் வெற்றி ஸ்தானத்தை யார் யார் பார்கிறார்கள், யார் யார் சேர்ந்து இருக்கிறார்கள், இதற்கும் மேல் உங்கள் பூர்வபுண்ணிய பலம் எப்படி உள்ளது என அறிந்து கொள்ளவும். பிறகு, எதிரியை எடை போடவும். பிறகு எதிரி மறையும் லக்னம் ஏது, ராசி ஏது என தேர்வு செய்து அந்த நாளில் உங்கள் குலதெய்வத்திற்கு தூப, தீப, நெய்வேத்தியங்களை குறைவின்றி செய்து  எதிரி செயலிழக்கும் லக்ன அல்லது ஹோரா நேரம் அறிந்து, வாராகியை வலம்வந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும். எதிரிகள் மறைவர் அல்லது நண்பராகி விடுவார்கள். இவைகளை செய்வதற்கு முன்பு, உங்கள் எண்ணம் செயல் சொல் இவை மூன்றும் நல்லதாக இருக்கவேண்டும். இதற்கு முன் உங்கள் ஆயுள் ஸ்தானத்தையும் சிறிது ஸ்புடம் போட்டு பார்க்க வேண்டும், இல்லையென்றால் எதிரி பலம் பெற்று இருந்தால் ஆபத்தை விலைக்கு வாங்கிய கதையாகி விடும்.
 
 
 
 
                         நீங்கள் நல்லவராக இருந்தும் எதிரிகள் அதிகம் உள்ளனரா...கவலையே படவேண்டாம்.  மனம் ஒன்றி ஒரு குறிப்பிட்ட நாளில் வாராகியை வழிபட்டால் எதிரிகள் உங்கள் கண் முன்னாலே காலில் விழுவார்கள் அல்லது காணாமல் போவார்கள் ஒரு சிலர் பஸ்பம் ஆகிவிடுவார்கள். குறப்பிட்ட நாள் என்பது அவரவர் ஜென்ம ஜாதகத்தை கொண்டு அறியவும். நமது கோரிக்கை நியாயமாக இருந்தால் தான் இது நிறைவேறும், இல்லாவிட்டால் எய்த அம்பு நமக்கே எமனகியும் விடும்.
=======================================================================================================

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும். 

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.

செல்: 9443540743. Vellore - 632002.

 


====================================================================================================

1 கருத்து: