மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 27 ஜூலை, 2013

தாராபலம் சந்திராபலம் thaaraa palam chandraa palam


தாராபலம் சந்திரா பலம் என்றால் என்ன..?          தாரா எனபது நட்சத்திரம் என்கின்ற தாரையை குறிக்கும். சந்திரா என்பது சந்திரன் நிற்கின்ற ராசி பலத்தை குறிக்கும்.  இவை இரண்டும் நாம் எந்த ஒரு காரியத்தை தொடங்கும் போதும் பார்ப்பது நாம் செய்ய போகும் காரியம் நல்ல முறையில் முடியவும், தொடர்ந்து நிறைய நன்மை அடையவும் ஏதுவாக அமையும். இவைகளை முக்கியமாக, திருமணம், கிரகபிரவேசம், பெண்ணை பார்க்க செல்லும் பொழுது, வியாபார ஆரம்பம் போன்ற காரியங்களை தொடங்கும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
 
          தாரா பலத்தை திருமணத்திற்கு பார்க்க வேண்டுமானால், சுப முஹுர்த்தம் வைக்கப்படவுள்ள நாளின் நட்சத்திரமானது, மணமகன் மற்றும் மணப்பெண்ணின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து எண்ணி வரும் தொகையை 9 ஆல் வகுத்தால் வரும் மீதி 2, 4, 6, 8, 9 ஆக வந்தால் தாராபலம் கொண்ட நாளாகும், மற்றவை தாரபலம் இல்லாத நாளாகும். இது முக்கியமாக பெண்ணிற்கு பார்ப்பது மிக அவசியம், இல்லையென்றால் சில விரும்பத்தகாத செயல்கள் நடந்துவிட கூடும்.

       சந்திராபலம் எனபது மணமக்களின் ஜென்ம ராசி முதல் சுப முஹுர்த்த நாளில் சந்திரன் இருக்கும் ராசி வரையில் எண்ணி வந்த தொகை கிழ்கண்ட எண்ணிக்கையில் அமைந்தால் அதற்குரிய பலன்கள் வருமாறு:

ஜென்ம ராசியில் சந்திரன் இருந்தால் உடல் ஆரோக்கியம்.

இரண்டாவது ராசியில் சந்திரன் இருந்தால் பணம் நஷ்டம்.

முன்றாவது ராசியில் சந்திரன் இருந்தால் செல்வதிரவிய லாபம்.

நான்காவது ராசியில் சந்திரன் இருந்தால் வியாதி பயம்.

ஐந்தாவது ராசியில் சந்திரன் இருந்தால் காரியத்தில் தடை ஏற்படும்.

ஆறாவது ராசியில் சந்திரன் இருந்தால் எதிரி நாசமாகிவிடுவான்.

ஏழாவது ராசியில் சந்திரன் இருந்தால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

எட்டாவது ராசியில் இருந்தால் எடுத்த காரியம் கெட்டுபோகும்.

ஒன்பதாவது ராசியில் சந்திரன் இருந்தால் காரியங்கள் தாமதமாக முடியும்.

பத்தாவது ராசியில் சந்திரன் இருந்தால் உத்தியோக வேலையில் முன்னேற்த்தம்.

பதினோறாவது ராசியில் சந்திரன் இருந்தால் விரும்பத்தை அடையலாம்.

பன்னிரண்டாவது ராசியில் சந்திரன் இருந்தால் பணம் செலாவாகும்.

             சில ஜோதிட நூல்கள் சந்திரன் சில ராசியில் இருந்தால் வேறு விதமாகவும் கூறுகிறது. இதில் சந்திரன் ஜென்ம ராசிக்கு எட்டில் இருக்கும் போது எந்த புதிய முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும்.

=======================================================================================================

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.

செல்: 9443540743. Vellore - 632002.


====================================================================================================

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக