மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 13 ஜூலை, 2013

சுகர தசை சுழற்றி அடிக்குமா..? sukra dasa demerits

சுக்ர தசை சுழற்றி அடிக்குமா..?                      சுகர தசை சுபிட்சத்தை செய்து விடும் என்று பரவலான செய்தி மக்களிடையே உள்ளது. ஒரு சில லக்னக்காரர்களுக்கு நிறைய செல்வத்தை தந்து அனுபவிக்க முடியாமல் அல்லல் செய்து விடும். ஒரு சில லக்னக்காரர்களுக்கு செல்வத்தை தந்து அவர் அனுபவிக்கவிடாமல் அவரது மனைவியை அனுபவிக்க செய்து விடும். இப்படி பல விநோதங்களை அவரவர் லக்னத்திற்கு ஏற்ப செய்யும் என்பதை ஜோதிடரை தவிர மற்றவர்கள் அறிய இயலாதே.. எனவே ஒவ்வொருவரும் ஜோதிட கல்வி கற்பது அவரவர்கள் வாழ்க்கையை செம்மையாக்கி விடும்.

                 சுக்ரன் எல்லோருக்கும் நல்லவர் இல்லை. சிலருக்கு இவர் பாதகாதிபதியாக வருகிறார். ஒரு சில லக்ன காரார்களுக்கு இவரே  மாரகாதிபதியாக வருகிறார். மேஷ லக்னகாரன்  பெண்களாலே அதிக மரணத்திற்கு ஒப்பான கேவலத்தை பெறுகிறான்.  கடகலக்ன காரனுக்கு இதே சுக்ரன் பாதகாதிபதியாக வந்து விடுகிறான். சிம்ம லக்னகாரன் பெண்களாலே தன் புகழை இழக்கின்றான். விருச்சிக லக்னகாரன் பெண்களுக்காகவே தன் செல்வத்தை செலவு செய்து ஓட்டாண்டி ஆகின்றான். மீன லக்னகாரான் இதே சுக்ரனால் சில நேரங்களில் ஜெயிலுக்கு கூட சென்று விடுகிறான்...இப்படி பல ஜோதிட உண்மைகள் அவரவர்கள் ஜாதகத்தில் மறைந்து உள்ளது. இனிமேலும் உங்களுக்கு சுக்ர தசை மீது ஆசை உள்ளதா..?


=======================================================================================================

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.

செல்: 9443540743. Vellore - 632002.====================================================================================================

1 கருத்து: