மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 17 அக்டோபர், 2014

ஆயில்யம் மாமியாருக்கு ஆகாதா...? ayilyam bride


ஆயில்யம் மாமியாருக்கு ஆகாதா...?

       ஒரு பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்தால், குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் சந்தோசமாக எங்க மாட்டுபொண்ணு வந்துட்டா..என்று குதிப்பார்கள். இதில் அதிகமாக எகிறி எகிறி குதிப்பவள் மாமியார் என்ற பதவி உயர்வு பெற்றவள் தான். ஏன் என்றால் சொல்லும் வேலையை மாடு மாதிரி வாய் திறக்காமல் செய்பவள் என்பதால் தான்.

       மருமகள் ஜென்ம நட்சத்திரம் ஆயில்யம் என்றால் ஐயோ வேண்டாம், வேண்டவே வேண்டாம் என்று கூறுகிறார்கள். ஏன்...? ஆயில்யம் என்பது மாமியாருக்கு ஆகாதாம். என்ன விஷயம் என்று பார்த்தால் ஆயில்யம் பெண் வந்தால் மாமியார் டிக்கட் வாங்கி விடுவார்களாம். எந்த ஊருக்கு டிக்கெட் என்றால் எமலோகம் என்று நிறைய பேர் வேதனையுடன் கூறுகிறார்கள்.

      யார் சொன்னது இப்படி என்றால் எங்க ஊரு ஜோதிடர் சொன்னார் என்று பெரும்பான்மையானவர்கள் சொல்க்கிறார்கள். உண்மையில் ஜோதிடர் சொன்னாரா என்றால்.. கொஞ்சம் ஆ...ஊ...என்று மழுப்புவார்கள்.
ஆயில்யம் நட்சத்திரம் கொண்ட மருமகள் மாமியாருக்கு மரண டிக்கெட் வாங்குவாள் என்று எந்த ஜோதிட சாஸ்திரத்திலும் சொல்லவே இல்லை. அப்படி இருக்க ஏன் இப்படி பட்ட கதைகள்.

      ஆயில்யம் என்பது மாமியாருக்கு ஆகாது என்பது இடைச்சருகல்.  உண்மை என்னவென்றால் ஆயில்ய நட்சத்திர காரர்கள் சுயநலவாதி, தான் உண்டு தனது குடும்பம் உண்டு என இருப்பர். குடும்பத்தை கண்ணும் கருத்துமாக பார்ப்பார், மேலும் முதல் முக்கியம் கணவன், பிறகு தான் உறவினர், உறவினர் வரிசையில் கணவனை தவிர மற்றவர்கள் இருப்பார்கள். இங்கு கணவனின் அப்பா, அம்மா கூட இந்த பெண் உறவினராக தான் பார்க்க நேரிடும். ஏன் என்றால் இவள் கணவனே கண்கண்ட தெய்வமாக நினைப்பவள். இவள் திருமணத்திற்கு பிறகு மாமியாரை மட்டுமல்ல அவளுடைய சொந்த அம்மாவை கூட உறவினராக தான் இவள் பார்ப்பாள். அப்படி இருக்க மாமியாரை மயானத்திற்கு இவள் எப்படி அனுப்புவாள்...?           அந்த காலத்தில் இது போன்ற ஆயில்யம் நட்சத்திர கொண்ட மருமகள் வீட்டில் எது செய்தாலும் முதலில் கணவனுக்கு கொடுப்பாள், பிறகு பிள்ளைகளுக்கு கொடுப்பாள், அடுத்து இருந்தால் தான் மற்றவர்களுக்கு கொடுப்பாள். இந்த இடத்தில் மாமியாரை 3-வது வரிசைக்கு தள்ளி விடுவதால் மாமியாருக்கு எதுவும் கிடைப்பதில்லை. குறிப்பாக ஒரு குழோம்பு வைத்தால் கூட குழம்பில் இருக்கும் நிறைய காய்கறிகளை தன் கணவனுக்கே கொடுத்துவிடுவாள். கடைசியில் குழம்பில் காய் இல்லாமல் மாமியாருக்கு போகும். சில நேரங்களில் குழம்பே கூட இல்லாமல் மாமியார் வெறும் தன்னிசோறு சாப்பிட நேரமாம். இதனால் மாமியாரின் உடல் நிலை குறைந்து மரணத்தை தொடும் அளவிற்கு கூட போகலாம் என்ற கதையினாலே ஆயில்யம் என்பது மாமியாருக்கு ஆகவே ஆகாது என்ற முடிவோடு மாமியார் உயிருடன் இருக்கும் வரை தன் ஆயில்யம் மருமகளை வீட்டிற்கு கொண்டுவரக்கூடாது என அவர்களாகவே முடிவு செய்து கொள்கின்றனர்.
ஆயில்யம் கொஞ்சம் சுயநலம் உள்ளதாலும், முக்கியமாக கணவனுக்கு முதல் மரியாதை என்று தருவதாலுமே இந்த பிரச்சனை. எனவே ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்று கூறுவதும் முற்றிலும் ஆகாததே.

===================================================================
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர்சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோவேலூர் – 632002
======================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக