மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 22 அக்டோபர், 2014

கந்தசஷ்டி விரதம் - கர்ப்பம் தரிக்கும். Sasti viratham

கந்தசஷ்டி விரதம் - கர்ப்பம் தரிக்கும்.

      
      ஜாதகத்தில் பாக்கியஸ்தானம் பூர்வபுண்ணிய ஸ்தானம் இவை இரண்டும் நம் ஆத்மசந்தோஷத்திற்கு மிக முக்கிய காரணமாகும். ஒருவனுக்கு எவ்வளவு தான் சொத்து சுகம் இருந்தாலும் பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லாவிட்டால் வாழ்க்கை வாடிப்போகும். திருமணம் முடித்து மூன்று வருடங்களுக்குள் குழந்தை பிறந்து விட்டால் பேரின்பமே. இல்லாவிட்டால் அப்பப்பா, படும் வேதனையை சொல்லவே வேண்டாம். சமூதாயத்தில் அதுவும் நமது தமிழ்நாடு போன்ற ஊரில் குழந்தை இல்லாத தம்பதியர்களின் தவிப்பு சொல்லில் அடங்காது.      கணவனின் ஜென்ம ஜாதகத்தில் லக்னத்தில் விஷமுள்ள பாம்புகளான ராகு அல்லது கேது இருந்துவிட்டால் கணவனின் விந்துக்களில் உள்ள உயிரணுக்கள் மிக குறைவாக இருக்கும். இப்பேற்பட்ட ஜாதகத்தில் சனி லக்னத்திற்கு 4, 7, 11 இடங்களில் இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் எவ்வளவு தான் உயிரணுக்கள் உற்பத்தியானவுடன் அழிந்துவிடும். செவ்வாய் 6, 7, 10 இடங்களில் இருந்து லக்னத்தில் இருந்த ராகு கேதுவை பார்த்து விட்டால் உயிரணுக்கள் உற்பத்திக்கே மருந்து சாப்பிட வேண்டிவரும். ஜனன லக்னாதிபதி நீச்சம் பெற்று பாவிகளின் பார்வை பெற்று இருந்தால் இதே போன்ற நிலை அமைந்துவிடுகிறது.

       இதே போல கணவனின் ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் சனியுடன் கூடிய புதன் இருந்தாலோ அல்லது மூன்றாம் இடத்தின் அதிபதி நீச்சமோ அஸ்தங்க தோஷமோ அடைந்துவிட்டால், உயிரணுக்கள் தேவைக்கு அதிகமாகவே இருந்தாலும் அதனுடைய நீச்சல் வேகம் (மொபிலிட்டி) இல்லாமல் போய்விடும். இதனால் கணவன் கட்டிலில் கூட சாந்தமாகவே இருப்பார்.

         பெண்களுக்கோ கர்பஸ்தானமான ஆறாமிடம் அடிபட்டு போனாலும், பெண்களின் ஜாதகத்தில் ஒன்பதாமிடம் கெட்டு போய் சுப கிரகங்களின் பார்வை இல்லாமல் தீயகிரகங்களின் பார்வை பெற்று விட்டு இருந்தால் கர்ப்பம் தரிப்பதே கேள்விக்குறியாகி விடுகின்றது.           
        பெண்களின் ஜாதக கட்டத்தில் ராகு லக்ன திரிகோணங்களில் இருந்தால் அதிகபடியான உதிரபோக்கும் கர்பம் கலங்கிபோகுதல் போன்ற நிலையும் ஒரு சில பெண்களுக்கு ஏற்பட்டு விடுகின்றது. இதே போல லக்ன திரிகோணங்களில் கேது இருந்து பாவிகளின் பார்வையும் பட்டுவிட்டால் மூன்று மாதம் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூட உதிரபோக்கு உண்டாகும். இதனால் சுழற்சி முறை மிகவும் பாதிப்படைந்து விடும், மேலும் இது போன்றவர்களுக்கு தாம்பத்தியம் மற்றும் குழந்தைபேறு போன்ற வார்த்தைகளை கேள்விபட்டாலே தலைவலி பிய்க்கும்.

            தம்பதியர்களின் ஐந்தாம் அதிபதி மற்றும் குரு இருவரும் ஜாதகத்தில் கெட்டு இருந்தால் இறைவனின் கருணை மட்டுமே பலன்தரும்.
  
        மேற்படி கிரக அமைப்பு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய ஜோதிட ஆன்மிகம் கலந்த எளிய பரிகாரம்;சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.


        ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தீபாவளி வருகிறது. மறுநாள் அமாவாசையன்று கெளரிநோன்பு கடைபிடிக்கபடுகிறது. இதற்குப் பிறகு வரும் வளர்பிறை பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.  சஷ்டி திதியில் முருகன் சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்கிறார். இதற்கு ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் உள்ளது. இந்த ஆறு நாட்களிலும் தம்பதியர்கள் இருவரும் கடுமையான விரதம் இருந்தால் குழந்தை பேறு பாக்கியம் கணவன் ஜாதகத்திலோ அல்லது மனைவி ஜாதகத்திலோ இல்லாவிட்டாலும், முருகன் அருளால் குழந்தை பிறப்பது கண்கூடு. இதை தான் ஷஷ்டியில் (விரதம்) இருந்தால் அகப்பையான கருப்பையில் முருகனே குழந்தையாக வந்து பிறப்பான்.

       பெண்களுக்கு இந்த விரதம் முறைப்படி அனுஷ்டிப்பதால் டி & சி செய்யாமலேயே கர்ப்பப்பை மற்றும் பெலோபியன் டியுபில் உள்ள கசடுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும். மாதந்திர மாதவிடாய் முறைபடுத்தபடும். இதனால் தாம்பத்தியத்திலும் நாட்டம் கூடும்.

முறைப்படி இந்த விரதத்தை மேற்கொள்ளும் ஆண்களுக்கு விந்து கெட்டி படும். விந்துவில் உயிரணுக்கள் உற்பத்தி பெருமளவு கூடும். ஆண்தன்மை வீரியம் வேகமாக அதிகரிப்பதை உள்ளப்பூர்வமாக உணரலாம். நரம்பு மண்டலமே ஓவராயிலிங் செய்த தெம்பு கிடைக்கும். 

விரதமுறை:


        வளர்பிறை பிரதமை முதல் கொண்டு சஷ்டி திதி வரையில் உள்ள இந்த ஆறு நாட்களிலும் முருகனுக்கு நிவேதித்த பால் பழங்களை உண்டு உபவாசம் இருத்தல் அவசியம். ஆறு நாளும் தொடர்ந்து இருந்தால் பலன் கூடும். பொதுவாக அனைவரும் ஆறாம் நாள் மட்டும் உபவாசம் இருந்து வழிபடுவார்கள். சூரசம்ஹாரம் பார்த்த பின்னர் உணவு உண்பர். ஏழாம் நாள் வீட்டில் முருகனுக்கு அதிவிமரிசையாக விருந்து படைத்து குறைந்தது ஆறு அடியவர்களுக்கு அன்னம் அளித்து முருகனை பிரார்த்தித்து கொள்ள வேண்டும்.


         
       இதில் அதிக முக்கியத்துவம் விரதத்தின் மகிமையே. விரதம் முறைப்படி இருக்க வேண்டும். உபவாசம் என்ற பெயரில் உப்பு இல்லாத உணவு என்று உப்புமா, பொங்கல், வடை, பாயசம், காபி என்று உட்கொள்ள கூடாது. தீபாவளி அடுத்த நாளான கௌரி நோன்பு அன்று வடை பாயசம் சாப்பிட்ட பின்னர் அன்று இரவே விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அன்று இரவு பழங்களை மட்டும் உட்கொள்ள வேண்டும்.

         மறுநாள் முதல் சஷ்டி திதி வரை பழங்கள், பழரசம் மட்டும் உட்கொள்ள வேண்டும். சிலர் தேனுடன் எழுமிச்சை தண்ணீர் மட்டும் கூட குடித்து விரதம் மேற்கொள்ளுவார்கள். இதனால் உடலில் உள்ள ரத்த நாளங்கள் சரிபடுத்த படும். ஞானமார்கத்தை மேற்கொள்ளுபவர்களும் இந்த எளிய முறையை பின்பற்றி நினைத்ததை சாதிப்பார்கள். இந்த விரதம் கடுமையானது என்பதால் இந்த நேரத்தில் ஒரு சிலருக்கு இரத்தஅழுத்தம்  (blood pressure) அதிகமாகிவிடும். ஒரு சிலருக்கு குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மயக்கம் வந்து நாடி குறைந்து விடும். எனவே இந்த விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக ஒரு மருத்துவரின் ஆலோசனை பேரிலே அனுஷ்டிக்க வேண்டும்.

       இந்த காலங்களில் தினமும் குளித்து முருகனை வழிபட வேண்டும். வெளிவேலைகளை தவிர்த்து வீட்டிலேயே இருக்க வேண்டும். அலுவலகத்திற்கோ வேறு வேலைக்கோ செல்ல கூடாது. இந்த ஆறுநாளும் விடுமுறை எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக உடல் உஷ்ணத்தை தவிர்க்க வேண்டும். வெளியில் சென்றால் இந்த நேரங்களில் உடனடியாக உடல் உஷ்ணம் ஏற்படும், அதுமட்டுமல்லாமல் மனநிலையும் மாறும். ஒரு சிலருக்கு இந்த நேரத்தில் எல்லா உணர்வுகளும் மேலோங்கி நிற்கும். இதில் காம உணர்வும் கூடி இருக்கும். இருந்தாலும் நாம் அதை புறக்கணித்து முருகனை மனமார உருகி முருகனின் பாடல்களை கேட்கவேண்டும்.

      இந்த நாட்களில் போதை வஸ்துக்கள், டீ, காபி, சாப்பாடு, டிபன் நொறுக்கு தினி இப்படி ஏதாவது வாயில் போட்டுவிட்டால் அவ்வளவு தான் விரதம் அதோகதிதான். இது கடுமையான விரதம். இந்த விரதத்தின் மகிமையை முசுகுந்த சக்ரவர்த்திக்கு வசிஷ்ட மாமுனிவர் கூறியதாக கருதபடுகிறது.

             அவரவர்கள் குலதெய்வத்தை வணங்கிய பின்னர் சஷ்டி விரதத்தை அனுஷ்டித்தால் அடுத்த கந்த சஷ்டிக்குள் முருகனின் அருளினால் பலன் கிடைக்கும்.

(இந்த கடுமையான விரதம் மேற்கொள்ளுபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே செய்யவேண்டும். இல்லாவிட்டால் விபரித விளைவுகளும் வரலாம்.)========================================================================


ஜோதிடம் ஒரு வாழ்க்கை கல்வி ஆன்லைன் ஜோதிட வகுப்புகள் சேர   தொடர்பு கொள்ள வேண்டிய ஈமெயில்: jothidananban@gmail.com

அன்புடன்,
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.

கௌரவ ஜோதிட பேராசிரியர்சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோவேலூர் – 632002


======================================================================

2 கருத்துகள்: