மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 16 அக்டோபர், 2014

தடை இல்லா தாம்பத்திய சுகம் non-stop


தடை இல்லா தாம்பத்திய சுகம் 
ஒரு தம்பதியர்கர்  தொடர்ந்து தடையில்லா தாம்பத்திய சுகம் அனுபவிக்க வாய்ப்பு உள்ளதா என சில ஜோதிட காரணங்களை கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


                         பெண்கள் ஜாதகத்தில் அயனசயன போக பாக்கிய ஸ்தானமான பனிரெண்டாம் வீடு சுபர்களின் வீடாகி, அங்கே சுபர் ஆட்சி பெற்றால், அந்த பெண் பிறந்ததிலில் இருந்து வாழ்நாள் முழுவதும் மாடிவீட்டில் சந்தோஷமாக தொடர்ந்து தாம்பத்திய சுகத்தை அனுபவிப்பாள். இவள் என்றும் இன்பமுடனே உறங்குவாள். ஒரு சிலர் தாம்பத்திய சுகம் ஒன்றே குறிக்கோளாக இல்லாமல் சந்தோசமாக தம்பதியர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தாலும் இவர்கள் இன்பத்தை உணர்வார்கள். பெரும்பாலும் இது போன்ற பெண்கள் மாடிவீட்டிலேயே இருப்பார்கள்.              ஜோதிட படி பெண்களின் ஜென்ம லக்னத்தையோ அல்லது லக்னாதிபதியையோ தேவகுருவோ அல்லது அசுர குருவோ பார்த்தால் பெண்கள் உடலில் நறுமணம் வீசும். அதிலும், முல்லை, இருவாட்சி, செண்பகம், ரோஜா இப்படி பட்ட வாசனைகள் அதனதன் கிரக அடிப்படையில் இருக்கும். இது போன்ற பெண்கள் தாம்பத்திய சுகம் உடலை விட மனதிற்கு அதிக இன்பத்தை தருவதுடன் ஒருவருக்கொருவர் உண்மையான அன்யோன்யத்தை பெறுகிறார்கள். இது போன்ற மங்கையர்கள் தங்களின் மானாளனின் மகிழ்ச்சியே தங்களின் மகிழ்ச்சியாக நினைக்கின்றனர்.

புருஷனின் ஜென்ம லக்னத்திற்கு ஏழாமிடத்தில் நீர் கிரகங்களோ அல்லது நீர் ராசியாகவோ இருந்துவிட்டால்  மனைவியால் தொடர்ந்து தெவிட்டாத அதிக இல்லற இன்பம் இனிதே கிடைக்கும். எழாமிடத்து நீர் ராசியின் தன்மைக்கேற்ப இன்பத்தின் அளவு மாறுபடுமே தவிர அவர்கள் பெறுகின்ற அனுபவத்தை  நினைத்தாலும் இன்பமே.

ஒரு ஆண்மகனின்  ஜாதகத்தில் சூரியன் 3-6-10-11 இல் இருந்துவிட்டால் அவன் ஜென்டில்மேன் மட்டும் அல்ல, உண்மையான ஆண்மை பொருந்திய  முரட்டு காளை என்றால் மிகையாகாது. இது போன்ற காளையை  அடக்க நான் நீ என்று கன்னியர்கள் மோதுவார்கள். இதனால் இந்த காளையை கல்யாணம் பன்ன வேண்டி நிறைய அப்ளிகேசன் வந்துகொண்டேயிருக்கும். இவர்கள் முரட்டு காளை என்றாலும், கட்டிய கன்னியை கலங்காமல் வைத்து கொள்பவர்கள்.
இல்லற இன்பம் இல்லாமல் போவதற்கு,  ஜாதகத்தில் ஏழாம் வீட்டிற்குரிய கிரகமும் சுக்ரனும் உங்கள் லக்னத்திற்கு மறைந்து (6-8-12 இடங்கள்) இருந்தால் இல்லற இன்பம் இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். இதற்கு ஜாதகத்தை வைத்து காரணங்கள் பல இருக்கலாம்.
அடுத்து சிலர்  உடம்பில் மீன் நாற்றம் அடித்துக்கொண்டே இருக்கும். இதனாலும் தாம்பத்தியம் தடை ஆவது மட்டுமல்லாமல் தடம் புரளவும் செய்யும்.  ஜாதகத்தில் லக்னம் அல்லது லக்னாதிபதியை நீச்சம் பெற்ற செவ்வாய் பார்த்தால் உடம்பில் மீன் நாற்றம் இருக்கும்.   ஜாதகத்தில் உள்ள ஒன்பது கிரகங்கள் மற்றும் லக்னம் ஆக, இந்த பத்தும் பனிரெண்டு ராசிகளில் உள்ள சூரிய ஓரை சந்திர ஓரை என்ற இரண்டில் சந்திர ஓரையில் ஏழு கிரகங்களுக்கும் மேலாக இருந்துவிட்டால் அவன் ஒரு  சாந்தஸ்வருபி. இவன் பூனையை விட அமைதியாக இருப்பான். இவன் மனைவியை தவிர உலகமே இவனை புகழும். இது போன்ற கணவன்மார்கள் வெளிஉலகத்திற்கு அதிக பராக்கிரமம் படைத்தவர்களாக இருப்பார்கள், ஆனால் இல்லறத்தின் இன்பம் தெரியாமலும் போய்விடும். மேலும் தம்பதியரில் யாரோ ஒருவருக்கு லக்னத்தில் சனி பகவான் தங்கி இருந்து, அவரது ஜீவனஸ்தனத்தில் கேது இருந்துவிட்டால் தாம்பத்திய சுகம் ஒரு பாவச்செயல் என்று தவறாக நினைத்து இளம்வயதிலேயே தாம்பத்திய சுகத்தை வெறுத்து, பரத்தை அடைய பரதேசி வேஷம் பூண்டு வெளியேறிவிடவும்  வாய்ப்பு.


8888888888888888888888888888888888888888888888888888888888888888888சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.

கௌரவ ஜோதிட பேராசிரியர்சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோவேலூர் – 632002


 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக