மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 27 அக்டோபர், 2014

வெற்றி தரும் நாள் victory days

வெற்றி தரும் நாள் 

" நாள் செய்வதை நல்லோரும் செய்யார் " என்பது முதுமொழி.

       வெற்றி மீது வெற்றி வந்து அது என்னை சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் ஜோதிடரை சேரும் என்று மற்றவர்கள் சொல்ல வேண்டுமா...?

         ஜோதிடனாகிய நாம் நம்மை  நம்பி வருபவர்களுக்கு வெற்றியை  தேடி தருவதில் தான் நமது வெற்றி உள்ளது.

        (அவன் உண்மையில் நம்மை நம்பி வருகிறானா என்று தெரிந்துகொள்ள வேண்டும்)

          வருகின்ற ஜாதகனின் நட்சத்திரத்திற்கு எட்டாவது தாரை மற்றும் ஒன்பதாவது தாரை உள்ள நட்சத்திரங்களை தேர்வு செய்துகொள்ளவேண்டும். 8- வது தாரை மைத்திர தாரை. 9-வது தாரை பரமமைத்திரம்.

       மைத்திரம் என்றால் மைதுனத்தில் பெறக்கூடிய இன்பம் போன்றது. சொல்ல போனால் அதிக இன்பம்.

         பரமமைத்திரம் என்றால் பரமனுடன் இரண்டற கலப்பது. இறைவனுடன் நமது மனம இணைவது. சொல்ல போனால் இது பேரின்பம்.

       நாம் இதை பற்றி விரிவாக பிறகு பேசலாம். நம்முடைய கருத்து என்னவென்றால் இன்பமான நாட்கள் என எடுத்துகொள்வோம். நமக்கு வெற்றி வந்தால் இன்பம் தானே.

        உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 8-வது & 9-வது நட்சத்திரத்தின் அதிபதியின் ஆளுமைக்குள் உள்ள நட்சத்திரங்கள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.

உதாரணம்: உங்கள் நட்சத்திரம் பரணி என்போம்.

பரணி 
கிருத்திகை 
ரோகினி 
மிருகசிரிஷம் 
திருவாதிரை 
புனர்பூசம் 
பூசம் 
ஆயில்யம் 
மகம்.

இதில் பாருங்கள் ஆயில்யம் & மகம் உங்களுக்கு 8-வது & 9-வது நட்சத்திரமாக வருகிறது.

ஆயில்யம் புதனுடைய நட்சத்திரம்,

புதனுடைய  ஆளுமையில் உள்ள நட்சத்திரங்கள்:

ஆயில்யம், கேட்டை, ரேவதி.

இதேபோல, மகம் கேதுவுடைய நட்சத்திரம்.

கேதுவின் ஆளுமையில் உள்ள நட்சத்திரங்கள்:

அஸ்வினி, மகம், மூலம்.

ஆக, இந்த பரணி நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு வெற்றி தேடி தரும் நட்சத்திரங்கள்:

ஆயில்யம், கேட்டை, ரேவதி, அஸ்வினி, மகம், மூலம். போன்றவை.


இதில், பரணி நட்சத்திரத்தின் ராசி மேஷம் என்பதால் இந்த ராசிக்கு எட்டாவது ராசியில் உள்ள நட்சத்திரங்கள் , மேற்கூறியவையாக இருந்தாலும் வெற்றி தருவது கொஞ்சம் சந்தேகம் என்பதால்,   அதை ஒதுக்கிவிடுவது மிக நல்லது.

இந்த பரணி நட்சத்திரம்  இருக்கும் மேஷ ராசியின் எட்டாவது ராசியில் உள்ள வெற்றி தரும் நட்சத்திரம் கேட்டை என தெரியவருகிறது. எனவே இவர் கேட்டை நட்சத்திரத்தை விட்டுவிடுவது நல்லது.

ஆக, மற்ற ஐந்து நட்சத்திரங்கள் இவருக்கு நிச்சயம் வெற்றியை தேடி தரும் என்பதால் இவர்  ஆயில்யம்,  ரேவதி, அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரம் உள்ள நாட்களை தேர்ந்தெடுத்தால் வெற்றி வாகை சூடுவார்.

வெற்றி மீது வெற்றி வர.

மேற்கூறிய இந்த ஐந்து நாட்களில், சுப ஓரையான குரு, சுக்ரன், புதன் ஒரைகளை தேர்ந்தெடுத்து கொண்டால் வெற்றி கனி நேரடியாக இவரது வாயில் வந்து விழும்.

(இதே போல செல்வம் வரக்கூடிய நாள்,  மனைவியுடன் இன்பம் பெறக்கூடிய நாள் இவைகளை கூட கூறலாம்.)

(இதே போல தோல்வியை மட்டுமே தழுவக்கூடிய நாளை பிறகு பார்ப்போம்)

==================================================================

 ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்
தொடர்பு க்குjothidananban@gmail.com


==================================================================


அன்புடன்,


சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர்சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோவேலூர் – 632002

2 கருத்துகள்: