மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மூலம் மாமனாருக்கு ஆகாதா...! moolam

மூலம் மாமனாருக்கு ஆகாதா...!   

       
         மூலம் நட்சத்திரம் உள்ள பெண்ணை தன் மகனுக்கு மணம் முடித்தால், மாமனார் உயிருக்கு ஆபத்து.. இது போன்று  பலதரப்பட்ட பேச்சுக்களை நாம் கேள்விப்பட்டு உள்ளோம். இது அனைத்தும் உண்மையா..? மூலம் பெண் தன மாமனாரின் உயிரை எடுக்கும் எமனாக மாறுவாளா...?          மூலம் நட்சத்திரம் என்றால், குழந்தை பிறக்கும் நேரத்தில், பூமியில் இருந்து பார்க்கும் போது சந்திரன் மூலம் நட்சத்திர கூட்டத்தின் திசையில் உலா வந்து கொண்டு இருப்பார். எனவே குழந்தையின் ஜென்ம நட்சத்திரம் மூலம் என்று கூறுவோம்.

        மூலம் நட்சத்திரத்தின் அதிபதி யார் என்றால் ஞானத்திற்கு காரகம் வகிக்கும் கிரகமான கேது பகவான். இந்த நட்சத்திரம் இருந்த ராசியோ தனுசு. புத்திக்கு காரகமான குருவின் சொந்த வீடு இந்த தனுசு. ஆக, ஞானமும் புத்தியும் சேர்ந்தால் என்ன ஆகும்..? பெரிய தத்துவஞானியாக மாறுவார்.

         இப்படிபட்ட அதிபுத்திசாலியான  தத்துவஞானி உலக வாழ்க்கையில் நிச்சயம் பற்று சற்று குறைந்தே இருக்கும். அதுமட்டுமல்லாமல் இவர்கள் எள்ளு என்றால் எண்ணையாக மாறுவார்கள். சொல்லபோனால் கற்பூர புத்தி. எதையும் டக்கென்று புரிந்து கொண்டு நடக்கும் ஆற்றல் உள்ளவர்கள்.

     இது போன்ற மூலம் நட்சத்திர பெண் உண்மையே பேசுவாள். மூடிமறைக்கும் குணம் இவளுக்கு இருக்காது. இவளுக்கு வரும் கணவன் அறிவாளியாக இருப்பனே தவிர எந்நேரமும் உண்மையை பேசுபவன் என்று அடித்து கூறமுடியாது. இவள் கணவன் ஆளுக்கு ஏற்றாற்போல் பேசுவதில் கெட்டிகாரன், எனவே இவன் இவனது பெற்றோர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளை கண்டுகொள்ளாமல் இருப்பான். ஆனால் இந்த பெண்ணோ அந்த சிறு தவறை கூட தட்டலென்று எல்லோர் மத்தியிலும் போட்டு உடைப்பவள். காரணம் இவள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவள் கிடையாது.

       உதாரணம் வீட்டிற்கு ஒருவர் வந்து உங்கள் சம்பளம் என்னவென்று கேட்டால் இது போன்ற பெண்கள் பைசா வரை விபரமாக கூறுவார்கள். இது அந்த வீட்டின் கணவனுக்கும் பிடிக்காது, அவனது அப்பாவிற்கும் பிடிக்காது. இது போன்ற பிரச்சனைகள் மனதிற்குள் வளர்ந்து கொண்டே சென்று ஒரு நாள் பூதாகாரமாக வெடிக்கும். அப்படி வெடிக்கும்போது, உங்களுக்கே தெரியும், இந்த மூலம் நட்சத்திர பெண் நியாயத்திற்கு மதிப்பு கொடுப்பாள் ஆனால் தவறு செய்து விட்டால் வயதானவர்கள் என்றாலும் தெருவில் நிக்கவைத்து மனபங்கத்தை எடுத்துவிடுவாள். இவள் குடும்பத்தையே பிரிந்தாலும் தனது வாதத்தை முன்னிறுத்தி ஜெயித்து விடுவாள். இதனால் கணவன் மனைவிக்குள் கசப்பு ஏற்பட்டு குடும்பம் பிரியும். இதனால் மாமனார் மருமகள் மீது வேறுவிதமான பழி போடவும் முயல்வார். இதனால் விரோதம் மேலும் வளரும். 

        இதனால் தான் மூலம் பெண் மாமனாருக்கு ஆகாது என்கிறார்கள். மாமனார், மாமியார் இருவரும் மிக நியாயமானவர்களாக இருந்தால் நிச்சயம் இந்த பெண்ணை புகழ்வார்கள். எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் சில நியாயங்களை மறப்பதால் இதன் பிரச்சனை உறுதியாகின்றது.

             இது போன்ற பெண்கள் ஆரம்பத்தில் இருந்தே வெளியூரில் கணவனுடன் வசித்தால் பிரச்சனைகளை விலக்கி விடலாம்.


========================================================================


ஜோதிடம் ஒரு வாழ்க்கை கல்வி ஆன்லைன் ஜோதிட வகுப்புகள் சேர   தொடர்பு கொள்ள வேண்டிய ஈமெயில்: jothidananban@gmail.com

அன்புடன்,

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.

கௌரவ ஜோதிட பேராசிரியர்சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோவேலூர் – 632002


======================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக