மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 21 மே, 2013

புனர்பூசம், விசாகம் & பூரட்டாதி Guru stars


புனர்பூசம், விசாகம் & பூரட்டாதி

நட்சத்திரகாரர்கள்

 

 
                                       இந்த நட்சத்திரகாரர்கள் எபோழுதும் இருப்பதைக் கொண்டு திருப்தியாக இருப்பார்கள். பெரியவர்களுக்கு தகுந்த மரியாதை தருவார்கள். பார்க்க எளிமையான தோற்றம் உள்ளவர். எதையும் தீர்கமாக ஆராய்ந்து முடிவு செய்வார்கள். எல்லோரும் இவர்கள் முடிவையே அவர்களுக்கே தெரியாமல் ஏற்றுகொள்ள செய்யும் அளவிற்கு பேச்சு சாதுர்யம் உள்ளவர்கள்.  எதுவும் தெரியாது என்று சொல்வார்கள், ஆனால் இவர்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை.
                        பூஜை, பூனஸ்காரங்களில் நேரத்தை அதிகம் செலவு செய்வார்கள். யாரையும் எளிதில் நம்பமாட்டார்கள், அதே நேரத்தில் யாரையும் ஏமாற்றமாட்டார்கள். இவர்கள் தற்பெருமைகாரர்கள், இதை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு இவர்களின் பேச்சு திறமை இருக்கும். படிப்பில் முன்னணியில் இருப்பார்கள் இருந்தாலும் இவர்கள் படிப்பு பாதியில் தடை ஏற்படும். இவர்கள் செய்யும் வேலை எல்லாம் முழுமை அடைந்து அழகாக முடிப்பார்கள். சாப்பாட்டில் பிரியமும், பால் நெய் இவற்றில் பற்றும் இருக்கும். இவர்கள் சமுதாயத்திற்கு பயந்து நடப்பார்கள்.
                    காதலில் சிக்காதவர்கள். குழந்தைகளிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்கள். கௌரவம் இவரை தேடி வரும். இவர்களுக்கு போதுமான அளவு பணவசதி இருக்கும், பெரியவர்கள் சொத்து இவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு அதிகம் இல்லை. இவர்களுக்கு பெரிய வியாதிகள் வராது, இருந்தாலும் சுகர், BP போன்ற வியாதிகள் அந்திமத்தில் எட்டிபார்க்கும். ஆசிரியர் பணி இவர்களுக்கு பெருமை சேர்க்கும்.
=======================================================================================================


வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
M.Balasubramanian,M.A.,
எம். பாலசுப்ரமணியன்,எம். .,
Astrologer & Founder, ஜோதிடர் & நிறுவனர்,
Vellore Astrology Researchers Association,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்,
VELLORE-632002cell: 9443540743.
வேலூர் - 632002 செல் 9443540743

====================================================================================================.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக