மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 23 மே, 2013

பூசம், அனுஷம் & உத்திரட்டாதி Saturn stars


பூசம், அனுஷம் & உத்திரட்டாதி 

 நட்சத்திரகாரர்கள்
 

                             இவர்கள் ஒரு முடிவை எடுத்தால் அந்த பிரம்மனே வந்தாலும் மாற்றதவர்கள். நிறைய நேரங்களில் நேர்மையாக இருப்பார்கள்.  அடம் பிடித்து காரியம் சாதிப்பவர்கள். படிப்பில் ஆர்வம் குறைவு, இருந்தாலும் வாழ்வின் முக்கிய விஷயங்கள் அனைத்தும் இவர்களுக்கு தெரியும். இவர்கள் ஆடை அணிகலன்களுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள்.
                         உயர்ந்த பதவி இவர்களை தேடி வரும். வார்த்தையை முடிந்தவரை காப்பத்துவார்கள். ஏதோ ஒரு இசையில் மனதை பறிகொடுப்பவர்கள். பேச்சில் கறார் தெரியும். உடலில் முடிவலர்ச்சி அதிகம் இருக்கும். எளிதில் யாரிடமும் அன்பு காட்டமாட்டார்கள். பிரயனங்களில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். மந்திர தந்திரத்தில் ஈடுபாடு இருக்கும். பெண்களிடம் அதிகம் பழக மாட்டார்கள்.
                     செய்யும் தொழிலில் இறைவனை பார்ப்பார்கள். கூட்டம் அதிகம் உள்ள கோயிலுக்கு போக மாட்டார்கள். ஒரு சிலருக்கு தீய நண்பர்களும் இருப்பார்கள். இவர்களை ஏமாற்றுபவர்களை தண்டிக்காமல் விடமாட்டார்கள். சொல்லபோனால் வம்புக்கு போகமாட்டார்கள், வம்பு என்று ஒன்று வந்துவிட்டால் நீயா நானா என்று மோதவும் தயாராக இருப்பார்கள். ஆரம்ப காலத்தில் மனைவியிடம் வெறுப்பை சம்பாதிபார்கள். குழந்தைகள் இவரை பார்த்தால் கொஞ்சம் பயப்படுவார்கள். ஒத்துபோக கூடிய தன்மை சிறிது குறைவு. படிப்பு சராசரியாக அமையும். நிறையப்பேர் பொறியாளர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு குளிப்பதில் ஆர்வம் அதிகம்.  இவர்களுக்கு சரும வியாதிகள், சளி இருமல் போன்றவை வாழ்வின் பிற்பாதியில் வர வாய்ப்பு உண்டு. நிலபுலன்கள் இவர்களுக்கு நிச்சயம் இருக்கும். பெரியவர்கள் சொத்தும் கிடைக்க வழி உண்டு.
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
M.Balasubramanian,M.A.,
எம். பாலசுப்ரமணியன்,எம். .,
Astrologer & Founder, ஜோதிடர் & நிறுவனர்,
Vellore Astrology Researchers Association,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்,
VELLORE-632002cell: 9443540743.
வேலூர் - 632002 செல் 9443540743

====================================================================================================.


1 கருத்து:

  1. Sir, I also belong to Vellore and lived therefor for a quite a number of years. I am an alumni of Voorhees college exited in 1974. what you said about pushya nakshtira persons is 100 % true in my case. Thanks a lot. I have a son who is estranged from me and does not believe in his parents. Is there any remedy for him which we can complete? Jeshta nakshtram 20th sept 85 6.00 pm are his statistics.

    பதிலளிநீக்கு